தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 25 oktober 2014

கிளி. கண்டாவளை கிராமசேவகர் நந்தகுமார் வீட்டின் மீது சமூக விரோதிகள் கல் வீச்சு!

அமைச்சர் தொண்டமானுக்கு எதிராக கட்சிக்குள் வலுக்கும் எதிர்ப்பு
[ சனிக்கிழமை, 25 ஒக்ரோபர் 2014, 07:05.01 AM GMT ]
ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க தயார் என அறிவித்ததை தொடர்ந்து, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
அமைச்சர் தொண்டமான், கட்சியின் அனுமதியின்றி அப்படியான தீர்மானங்களை எடுக்க முடியாது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனை மீறி அப்படியானதொரு தீர்மானத்தை எடுத்தால், கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் கட்சியில் இருந்து வெளியேறக் கூடும் என அண்மையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றின் போது அமைச்சிரிடம் சுட்டிக்காட்டியிருந்தனர்.
அமைச்சர் தொண்டமானுக்கு எதிராக கட்சிக்குள் பாரிய எதிர்ப்புகள் ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டால், இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் பாரிய பிளவு ஏற்படுவதை தடுக்க முடியாது என அவர்கள் மேலும் கூறியுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszARZKXmo7.html
துண்டு விழும் 521 பில்லியன் ரூபாவை ஈடு செய்ய கடன் வாங்கும் அரசாங்கம்
[ சனிக்கிழமை, 25 ஒக்ரோபர் 2014, 07:42.50 AM GMT ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் துண்டு விழும் முழுத் தொகை 521 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் துண்டு விழும் தொகை 500 பில்லியன் ரூபா என ஏற்கனவே மதிப்பிடப்பட்டிருந்தது.
எனினும் அது மேலும் 21 பில்லியன் ரூபாவினால் அதிகரித்துள்ளது.
இதனடிப்படையில் அடுத்த ஆண்டுக்கான அரசாங்கத்தின் செலவீனத்தில் துண்டு விழும் தொகை 521 பில்லியன்.
இந்த துண்டு விழும் தொகையை ஈடுசெய்ய உள்நாட்டில் 270 பில்லியன் ரூபாவும் வெளிநாட்டில் 251 பில்லியன் ரூபாவும் கடனாக பெறப்பட உள்ளது.
நாட்டின் அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தில் துண்டு விழும் தொகையை ஈடு செய்ய 5 சதத்தை கூட உழைக்க முடியாத நிதியமைச்சர் மற்றும் ஜனாதிபதியை கொண்ட அரசாங்கம் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வரவு செலவுத் திட்டத்தை வாசித்து மகிந்த ராஜபக்ஷ நத்தார் தாத்தாவை போல் நடிக்க முடிந்தாலும் அரசாங்கம் பெறும் கடனை செலுத்த போவது மக்களே அன்றி ராஜபக்ஷவினரோ அரசாங்கத்தில் உள்ள எவருமோ அல்ல.
அத்துடன் கடனை திருப்பி செலுத்தும் இயலுமை அரசாங்கத்திற்கு இல்லை என்பதும் இந்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது எனவும் பொருளாதார நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszARZKXmpz.html
கிளி. கண்டாவளை கிராமசேவகர் நந்தகுமார் வீட்டின் மீது சமூக விரோதிகள் கல் வீச்சு
[ சனிக்கிழமை, 25 ஒக்ரோபர் 2014, 07:51.13 AM GMT ]
கிளிநொச்சி கண்டாவளை பிரதேசசெயலர் பிரிவில் கடமையாற்றும் கிராம சேவகர் ரி.நந்தகுமார் வீட்டின் மீது கடந்த 21ம் திகதி இரவு10.50 மணியளவில் இனந்தெரியாத நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து நின்று மிகப்பெரிய கற்களை வீட்டின் மீது வீசி சேதப்படுத்தியுள்ளனர்.
வீட்டில் அனைவரும் உறக்கத்தில் இருந்தவேளையில் இந்த கல்வீச்சு சம்பவம் இடம்பெற்றுள்ளது. கற்கள் வீட்டில் இருந்தவர்கள் மீது விழுந்திருப்பின் மிகமோசமான காயங்கள் ஏற்பட்டிருக்கும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வாரங்களில் இப்படியாக கல் எறிவீச்சு சம்பவங்கள் இரண்டு நடந்தேறியுள்ளன. இந்த இரண்டு சம்பவத்திலும் ஒரே தரப்பினரே ஈடுபட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுவதுடன், இவர்கள் அரசாங்கத்துடன் சேர்ந்தியங்கும் ஒட்டுக்குழுக்களாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்படுகின்றது.
கல் எறி வீச்சுக்குள்ளான இரண்டு வீட்டை சேர்ந்தவர்களும் சமூக அக்கறையுடன் பணியாற்றுகின்ற மதிப்புடையவர்கள் என்பதுடன் கிளிநொச்சி மாவட்டம் மற்றும் கிராமங்களில் மக்கள் பணியில் முன்னின்று உழைப்பவர்கள் என்பதுடன் அரசாங்கத்தோடு சேர்ந்தியங்கும் சமூகவிரோதக் கும்பல்களின் ஏமாற்று நாடகங்களோடு ஒத்துப்போகாதவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவங்கள் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmszARZKXmp0.html

Geen opmerkingen:

Een reactie posten