[ சனிக்கிழமை, 25 ஒக்ரோபர் 2014, 02:44.01 PM GMT ]
எனவே, யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் நவம்பர் மாத இறுதியில் தீர்மானிக்கப்படும் என சிங்கள பத்திரிகையொன்றுக்கு தகவல் வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் ஆளும் கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டுமென ஒரு தரப்பினர் கோரி வருகின்றனர்.
மற்றுமொரு தரப்பினர் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டுமென கோரி வருகின்றனர்.
குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண தலைவர்கள் அரசாங்கத்தை விட்டு விலகி, ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டுமென கோருகின்றனர்.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படும் காலத்தில், யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும்.
இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் வரையில் கட்சியின் அனைத்து முக்கியஸ்தர்களுடனும் கலந்துரையாடப்பட உள்ளதாக கட்சியின் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARZKXmq6.html
வரவு செலவுத்திட்டத்துக்கு வரவேற்பு! நாடு முழுதும் பட்டாசு முழக்கம்
[ சனிக்கிழமை, 25 ஒக்ரோபர் 2014, 02:48.33 PM GMT ]
இது தொடர்பான செய்தியொன்றை அரச பத்திரிகையான தினமின வெளியிட்டுள்ளது.
அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டம் குறித்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பொதுமக்கள் தாமாக முன்வந்து பட்டாசுகளை கொளுத்தியதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் இந்நடவடிக்கையின் பின்னால் அமைச்சர் பசில் ராஜபக்ஷ செயற்பட்டிருந்தார்.
தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் ஜனாதிபதி செயலகம் ஊடாக பட்டாசுகளை வழங்கி, வரவு செலவுத்திட்ட உரையின்போது கொளுத்துமாறு அவர் ஆலோசனை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszARZKXmq7.html
கண்டியில் காணாமல் போன ஜேர்மனிய பெண் கண்டுபிடிப்பு
[ சனிக்கிழமை, 25 ஒக்ரோபர் 2014, 03:23.04 PM GMT ]
ஏனைய சுற்றுலா பயணிகளுடன் குறித்த 78 வயதான பெண்ணும் மலையில் ஏறியுள்ளார்
எனினும் இடையில் அவரால் இயலாத நிலையில் தாம் கீழே இறங்கிச்செல்லப் போவதாகவும் ஏனையவர்களை மலையேறுமாறும் குறித்த பெண் கூறியுள்ளார்.
இந்த நிலையில் ஏனைய சுற்றுலா பயணிகள் மலையேறி திரும்பிய போது, ஜேர்மனியை பெண்ணை காணவில்லை.
இதனையடுத்து குறித்த பெண், மலைப்பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டார்.
திசைமாறிய சென்றிருந்த அவர் சிறு காயங்களுடன் படையினரால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
http://www.tamilwin.com/show-RUmszARZKXmry.html
அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு கட்டியம்? பங்குச் சந்தை சரிவு
[ சனிக்கிழமை, 25 ஒக்ரோபர் 2014, 03:29.18 PM GMT ]
இது தொடர்பான விசேட கட்டுரையொன்றை ரொயிட்டர் செய்திச் சேவை வெளியிட்டுள்ளது.
கொழும்பு பங்குச் சந்தையில் கடந்த திங்கட்கிழமை தொடக்கம் சரிவு ஏற்பட்டுள்ளது. இன்றைய நிலையில் லாபம்தரும் நிறுவனங்களின் பங்குகளிலும் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
வரவு செலவுத்திட்ட அறிக்கையின் துண்டுவிழும் தொகை, எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள தேசிய தேர்தல் என்பனவும் பங்குச் சந்தை வீழ்ச்சிக்கான உடனடிக் காரணங்களாக ரொயிட்டர் செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.
எனினும் பாரியளவிலான பங்குச் சந்தை வீழ்ச்சி என்பது பொதுவாக அரசாங்கமொன்றின் வீழ்ச்சியின் முன்னறிவிப்பாகவே கருதப்பட வேண்டியுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszARZKXmrz.html
அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவின் மெய்ப்பாதுகாவலர் துப்பாக்கி மாயம்
[ சனிக்கிழமை, 25 ஒக்ரோபர் 2014, 03:42.39 PM GMT ]
நிரூபமா ராஜபக்ஷவின் மெய்ப்பாதுகாவலர்கள் அவருக்குச் சொந்தமான கொழும்பு-07 வோட் பிளேசிலுள்ள வீட்டின் ஒரு பகுதியில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் அங்கு வைக்கப்பட்டிருந்த பிரதான மெய்ப்பாதுகாவலரின் கைத்துப்பாக்கி காணாமல் போயுள்ளது.
இது தொடர்பாக அமைச்சரவைப் பாதுகாப்புப் பிரிவினர் கறுவாத்தோட்ட பொலிசாருக்கு அறிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszARZKXmr0.html
Geen opmerkingen:
Een reactie posten