விமானத்தில் பயணித்திருந்த டோட்டலின் தலைமை நிர்வாகி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாக டோட்டல் நிறுவனம் மற்றும் விமான நிலைய பேச்சாளர் ஆகியோர் தமது உத்தியோகபூர்வ அறிவித்தலை இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டிருந்தனர். இதில் கிறிஸ்டோப் டி மாஜெரீயுடன் மூன்று விமான பணியாளர்களும் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவினர் விமானம் விபத்துக்குள்ளான பகுதிக்கு இன்று சென்று பார்வையிட்டுள்ளனர். மேலும் இந்த விமானத்தின் கறுப்புப் பெட்டியும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தின்போது விமானத்தை செலுத்திய விமானி மதுபோதையில் இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும் குறித்த விமானி சார்பில் நியமிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளதோடு, விமானத்தை செலுத்திய விமானி விமானப் போக்குவரத்து விதிகளை இவர் மீறவில்லை என்றும் கூறியுள்ளார். Vnukovo விமான நிலையத்தை முன்னர் ரஷ்ய ஜனாதிபதி உட்பட இராஜதந்திரிகள் பயன்படுத்திவந்துள்ளனர்.
இதேவேளை ரஷ்யாவில் முதலிட்டுள்ள வெளிநாட்டு நிறுவனங்களின் முதற்தரப் பட்டியலில் டோட்டல் எண்ணெய் நிறுவனமும் இடம்பிடித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.athirvu.com/newsdetail/1281.html
Geen opmerkingen:
Een reactie posten