வரவு, செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் நடைபெற்ற தேநீர் விருந்துபசாரத்தில் முக்கிய கட்சிகள் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, 2014ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்திருந்தார்.
வரவு- செலவுத் திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் வழமையாக தேநீர் விருந்துபசாரமொன்றை ஜனாதிபதி வழங்குவது வழமையாகும். இந்த தேநீர் விருந்துபசாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகள் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கட்சிகள் ஜனாதிபதியின் விருந்துபசாரத்தை புறக்கணித்துள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த விருந்துபசாரத்தில் பங்கு பற்றியதா என்பது பற்றிய தகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை.
எனினும், ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி மற்றும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் வரவு செலவுத்திட்டத்தின் பின்னர் ஜனாதிபதி வழங்கும் விருந்துபசாரத்தில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
மகிந்தரின் தேநீர் விருந்துபசாரத்தை எதிர்கட்சிகள் வெறுத்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டும் சென்றுள்ளது ஏனைய எதிர்கட்சிகள் மட்டில் பாரிய விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் எதிர்கட்சிகளின் கூட்டுப் பெறுப்பின்மைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இன்றைய செயற்பாடு நல்ல உதாரணம் என ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் கபீர் காசீம் குறிப்பிட்டதுடன் வடமாகாண முதலமைச்சரின் பதவிபிரமான நிகழ்வையும் கூட்டமைப்பு நியாயப்படுத்தியதுடன் எதிர்காலத்தில் பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்குள்ளும் நுளையும் சாத்தியம் உள்ளது என மேலும் தெரிவித்தார்
http://www.jvpnews.com/srilanka/84882.html
Geen opmerkingen:
Een reactie posten