சிங்கள அரசு புலனாய்வுப் பிரிவினர் மூலமும் ஒட்டுக் குழுக்கள் மூலமும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை ஐ.நா விசாரணைக்குழுவிற்கு அனுப்பிக் கொண்டிருப்பதாக கேள்விப்படுகின்றோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தை காலத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்தினை மீறியதாக சிங்கள அரசு ஆயிரக்கணக்கான போர்க்குற்றச்சாட்டுக்களை கூறியிருந்தார்கள்.
2009 இற்குப் பிற்பட்ட காலங்களில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இனவழிப்பு மற்றும் வன்முறைகள் தொடர்பிலான ஆவணப்படுத்தல்கள் மூலம் சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்களை நாங்கள் எடுத்துக்கூறாவிடில், சிங்கள அரசு மீண்டும் சர்வதேசத்தை ஏமாற்றப் போகிறது.
விடுதலைப் புலிகள் புரிந்தது மட்டுமே போர்க்குற்றம் என்பதை சிங்கள அரசு சர்வதேசத்தின் முன்னிலையில் கூறப் போகின்றது என லங்காசிறி வானொலியின் வட்டமேசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATaKWmqy.html
Geen opmerkingen:
Een reactie posten