யாழ்.தேவியை வேடிக்கை பார்ப்பவர்க்கும் கூட்டம்
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் பல்வேறு எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியிலும் யாழ் தேவி புகையிரத சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இங்கு புதிதாக ஆரம்பித்துள்ளதால் புகையிரத நிலையத்தைப்; பார்வையிடுவதற்கும் பொது மக்கள் அதிகளவில் வருகின்றனர். அதே போன்று இந்தச் சேவை ஆரம்பிக்கப்பட்ட அன்று தொடக்கம் இன்று வரை அதிகளவான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். குறிப்பாக புகையிரதத்தில் பயணிப்பதற்கு வருகின்ற பயணிகளை விடவும் புகையிரத நிலையத்தை மற்றும் புகையிரதத்தை பார்க்க வருகின்ற பொது மக்களின் எண்ணிக்ககை அதிகரித்தே காணப்படுகின்றது.
இங்கு விடுமுறை தினங்கள் மற்றும்; மாலை நேரங்களில் அதிகளவானோர் பார்வையிடுவதற்காக மட்டும் வருகின்றனர். இவ்வாறு வருகின்ற பொது மக்கள் சில நேரங்களில் அனர்த்தங்களை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டிருப்பது தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருக்கின்றன.
இங்கு புகையிரத நிலையத்திற்குள் வருவதாயின் மேடைச் சீற்றுக்கள் பெற்று அனுமதியுடன் தான் உள்ளே வர முடியும். ஆனால் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் தற்போது இங்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது. ஆயினும் தொடர்ந்தும் பொது மக்கள் அவதானமின்றி அனர்த்தங்களை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டால் மேற்படி நடைமுறையை இங்கும் ஏற்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்றார்.
ஆகவே ரயில் நிலையத்தைப் பார்க்க வருகின்றவர்கள் மிக அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொண்டுள்ள ரயில் நிலையப் பணிப்பாளர் ரயில் வருகின்ற போதும் ரயில்க் கடவைகள் மற்றும் இதர இடங்களிலும் மக்கள் மிக அவதானமாகச் செயற்பட வேண்டுமென்றும் அறிவுறுத்தியுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/85009.html
வடக்கில் “CV” யைச் சந்திக்கத் தயாராகும் சர்மா
கமலேஸ் சர்மா நேற்றைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். ஐந்து நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும் சர்மா வடக்கிற்கு விஜயம் செய்ய உள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் சபாநாயகர் சமால் ராஜபக்ஸ உள்ளிட்ட பல்வேறு முக்கியஸ்தர்களை சர்மா சந்திக்க உள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/85012.html
வன்னேரிக்குளத்தில் ஒன்றரை இலட்சம் மீன்குஞ்சுகள்!
http://www.jvpnews.com/srilanka/85024.html
விடுதலைப் புலிகள் மீள் எழுச்சி பெறுவர்!
கொழும்பு மவ்பிம சிங்களப் பத்திரிகை சோதிடர்களின் கருத்துக்களை எள்ளடக்கி பத்தியொன்றை வெளியிட்டுள்ளது. அந்த பத்தியிலேயே இவ்வாறு ஊகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள சனிப்பெயர்ச்சியை மையமாகக் கொண்டு இவர்களது கணிப்புகள் வெளியாகியுள்ளன.
தென்னிலங்கையில் பிரபல சோதிடர்களான சுமணசிறி பண்டார, எஸ்.ஜே. சமரக்கோன் ஆகியோர் விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி நிச்சயம் என்று உறுதிபடக் கூறியுள்ளனர்.
சர்வதேச மற்றும் உள்நாட்டு நெருக்கடிகள் காரணமாக இப்போதுள்ள அரசாங்கம் கவிழும் நிலைமை ஏற்படும் என்றும் சூசகமான முறையில் அந்த சோதிடர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
கடந்த காலங்களிலும் இவ்வாறான சனிப்பெயர்ச்சியின்போது சுதந்திரக் கட்சிக்கு நெருக்கடிகள் ஏற்பட்டன என்றும் சுமணசிறி பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.
சோதிடர் போத்தலகே, விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி இனி ஒருபோதும் சாத்தியமில்லை என்றும், அதற்குப்பதிலாக இலங்கை மீது சர்வதேச நெருக்கடிக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
சோதிடர் எஸ்.ஜே. சமரக்கோன் அரசாங்கம் பதவியிழப்புக்கு மேலதிகமாக நீதித்துறை தீர்ப்புகள் ஊடாக நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.
2005ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்த வெற்றிபெற மாட்டார் என்று 50 சோதிடர்கள் தெரிவித்திருந்தனர். மஹிந்தவுக்கு ஆதரவாக எட்டுப்பேர் மட்டுமே கருத்து வெளியிட்டிருந்தனர். அவர்களில் எஸ்.ஜே. சமரக்கோன் முக்கியமானவர்.
2005 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவே ஜனாதிபதியாவார் என்றும், இரண்டு தடவைகள் அவர் பதவி வகிப்பார் என்றும் கணித்துக்கூறியிருதார். அதேகாலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் முடிவு குறித்தும் எஸ்.ஜே. சமரக்கோன் தெளிவான எதிர்வு கூறலை வெளியிட்டிருந்தார்.
அது மட்டுமன்றி அவரது எதிர்வு கூறலுக்கேற்ப சரத் பொன்சேகா மீதான தற்கொலைத் தாக்குதல், மங்கள-ஸ்ரீபதி அரசாங்கத்திலிருந்து விலகி எதிர்க்கட்சியில் இணைந்து கொண்ட சம்பவம் போன்ற நிகழ்வுகளும் அச்சொட்டாக நடந்து முடிந்திருந்தன என்றும் நம்பிக்கை வெளியிடப்படுகிறது.- என்று அந்த பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.jvpnews.com/srilanka/85033.html
புலிகள் மீதான தடைய தொடர்வதா? இல்லையா? என்பது தொடர்பில் பிரித்தானியா மீளாய்வு !!
கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரக பேச்சாளர் ஒருவரின் கருத்தை அடுத்து இந்த எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அண்மையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை ரத்து செய்து தீர்ப்பளித்திருந்தது.
இந்த தீர்ப்பு குறித்து தற்போது பிரித்தானியா ஆராய்ந்து வருவதாக அவர் கூறியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைக்கு அப்பால், பிரித்தானியாவின் 2000ம் ஆண்டு பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
எனினும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றம் வழங்கியுள்ள குறித்த தீர்ப்பு அரசியல் தலையீடுகள் இன்றி, சட்ட ரீதியாக வழங்கப்பட்டுள்ளது.
எனவே இந்த தீர்ப்பின் அடிப்படையில், பிரித்தானியாவின் தடை குறித்தும் ஆய்வு செய்ய வேண்டி இருப்பதாக அவர் கூறி இருக்கிறார்.

http://www.jvpnews.com/srilanka/85036.html
Geen opmerkingen:
Een reactie posten