வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிப்பு- பதிலடி கொடுக்க ஐ.தே.க மாற்று வரவு செலவுத் திட்டம் ஆரம்பிப்பு
[ வெள்ளிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2014, 01:15.49 AM GMT ]
நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படும்.
வரவு செலவுத்திட்டம் தயாரிப்பதற்கு பல மாதங்களுக்கு முன்பிருந்தே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொழிற்சங்கங்கள், அமைப்புக்கள் ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், விவசாய அமைப்புகள், வாணிப சபைகள், உட்பட பல்வேறு தரப்பினரை சந்தித்து கருத்துக்களை பெற்றிருந்தார்.
இது தவிர நிதி அமைச்சின் செயலாளர் பி.பி. ஜயசுந்தரவும் அமைச்சர்கள், மாகாண முதலமைச்சர்கள், ஆகியோரை தனித்தனியாக சந்தித்து வரவு செலவுத்திட்டத்திற்காக கருத்துக்கள் பெற்றிருந்தார்.
சகல தரப்பினரதும் யோசனைகள், கருத்துக்கள் என்பவற்றின் அடிப்படையில் இம்முறை வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதோடு அபிவிருத்தி சார்ந்த மக்கள் நல வரவு செலவுத் திட்டமாக இது அமையும் என நிதியமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வறிய மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த தேவையான ஊக்குவிப்புகள், ஏற்றத்தாழ்வுகளை மட்டுப்படுத்தல் என்பன குறித்தும் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக அறிய வருகிறது.
அரச மற்றும் தனியார் துறை ஊழி யர்களின் வருமானம் அதிகரிக்கும் வகையில் வரவு செலவுத்திட்டம் தயாராகியுள்ளதாகவும் அறிய வருகிறது.
வரவு செலவுத்திட்டத்தில் மீன்பிடி, போக்குவரத்து, பெருந்தோட்ட கைத்தொழில், விவசாயம், சுற்றுலா, சிறு, மத்திய உற்பத்தித்துறைகள் தனியார் துறை, சேவை துறை, நிர்மாணத்துறை, வங்கி, நிதி, தொடர்பாடல், கப்பற்துறை சமூக சேவை உட்பட அநேக துறைகளின் மேம்பாட்டிற்கு யோசனைகள் முன்வைக்கப்படவுள்ளன.
வரவு செலவுத்திட்ட துண்டு விழும் தொகையையும் பணவீக்கத்தையும் குறைக்கும் வகையிலும் வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை நாளை முதல் வரவு செலவுத் திட்ட விவாதங்கள் ஆரம்பமாகிறது.
நவம்பர் முதலாம் திகதி வரை முதலாம் வாசிப்பு மீதான விவாதமும் நவம்பர் 1 முதல் 22 வரை குழுநிலை விவாதமும் இடம்பெறும்.
அரசாங்கத்திற்கான பதிலடி ஆரம்பம்! ஐ.தே.க. மாற்று வரவு செலவுத் திட்டம் தயாரிப்பு
அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் ஐ.தே.க. திட்டத்தின் ஒரு கட்டமாக மாற்று வரவு-செலவுத் திட்டமொன்றும் தயாரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் ஐ.தே.க. வியூகமொன்றை வகுத்துள்ளது.
இதன் பிரகாரம் அரசியல் ரீதியாக மட்டுமன்றி நிர்வாக ரீதியாகவும் ஐ.தே.க. வின் ஆற்றல்களை வெளிப்படுத்த அக்கட்சி தீர்மானித்துள்ளது. இதன் ஒரு கட்டமாக அரசாங்கம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள வரவு-செலவுத்திட்டத்திற்கும் ஐ.தே.க. மாற்று வரவு செலவுத்தி ட்டமொன்றைத் தயாரித்து செயல்ரீதியாக பதிலடி கொடுத்துள்ளது.
மேலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஐ.தே.க. அதிகாரத்துக்கு வந்தவுடன் ஜனாதிபதியின் இன்றைய வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகள் ரத்துச் செய்யப்பட்டு, தமது கட்சியின் மாற்று வரவு-செலவுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் ஐ.தே.க. அறிவித்துள்ளது.
ஐ.தே.க.வின் மாற்று வரவு-செலவுத்திட்டத்தில் அரச, தனியார் ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு, ஓய்வூதிய அதிகரிப்பு, நலனோம்புகை செயற்திட்டங்கள், வட்டி வீதம் குறைப்பு, சுயதொழில் கடன் வசதிகள் என்று மக்களைக் கவரும் வகையிலான பல அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
வரவு செலவுத்திட்டத்துக்கு பட்டாசு கொளுத்தி வரவேற்பு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று வரவு-செலவுத்திட்டத்தை முன்வைக்கும் போது பட்டாசு கொளுத்தி வரவேற்பளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்ட உரையின் போது ஜனாதிபதி மக்கள் நலத்திட்டங்களை அறிவிக்கும் ஒவ்வொரு தடவையும் பட்டாசுகளைக் கொளுத்தி பொதுமக்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது இ்த்திட்டத்தின் நோக்கமாகும்.
நாட்டின் முக்கிய நகரங்கள், சனநடமாட்டமுள்ள இடங்கள் மற்றும் அரச நிறுவனங்களில் அவ்வாறு பட்டாசு கொளுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் சூத்திரதாரி அமைச்சர் பசில் ராஜபக்ஷ என்று தெரியவந்துள்ளது.
மேலும் இதற்குத் தேவையான பட்டாசுகளை தொகுதி அமைப்பாளர்கள் மூலம் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரச நிறுவனங்களுக்கான பட்டாசுகள் ஜனாதிபதி செயலகம் மூலமாக வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சார அலுவலர்கள் கவனித்துக் கொள்வார்கள் என்றும் தெரிய வருகின்றது.
http://www.tamilwin.com/show-RUmszARYKXnr3.html
அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்காவுக்கு எதிராக ஆளுங்கட்சிக்குள் அதிருப்தி
[ வெள்ளிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2014, 12:39.44 AM GMT ]
அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களில் ஒருவராக தற்போது உருவெடுத்துள்ளார்.
இந்நிலையில் அவர் ஆளுங்கட்சியை விட ஐக்கிய தேசியக் கட்சியின் மீதே அதிக பாசம் கொண்டிருப்பதாக மத்திய மாகாண சுதந்திரக் கட்சி அரசியல்வாதிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
அமைச்சர் மூலமாக வேலைவாய்ப்புப் பெறும் பலரும் ஐக்கிய தேசியக் கட்சிக்காரர்களாக இருப்பதாக அவர்கள் ஆதாரபூர்வமாக குற்றச்சாட்டுக்களை அடுக்கியுள்ளனர். மேலும் கட்சியில் ஏனையவர்களை மதிக்காது அமைச்சரின் செயற்பாடுகள் அமைந்திருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்நிலையில் அமைச்சர் திசாநாயக்கவுக்கு எதிராக மத்திய மாகாண அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து போர்க்கொடி உயர்த்த தீர்மானித்துள்ளனர். அதன் முதற்கட்டமாக சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபாலவிடம் முறைப்பாட்டுக் கடிதம் ஒன்றைச் சமர்ப்பிக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
எனினும் ஜனாதிபதித் தேர்தல் நெருங்கி வந்துள்ள நிலையில் அமைச்சர் எஸ். பி. திசாநாயக்க மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் கண்டுகொள்ளாமல் ஒதுக்கப்படும் சாத்தியம் இருப்பதாகவும் ஆளுங்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
http://www.tamilwin.com/show-RUmszARYKXnr1.html
ராஜபக்ச குடும்பத்தின் பெயரைப் பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபட்ட 143 பேர் கைது
[ வெள்ளிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2014, 12:26.08 AM GMT ]
ஜனாதிபதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களைப் பயன்படுத்தி ஊழல் மோசடிகளில் ஈடுபட்டமை தொடர்பில் 273 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளார் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஜனாதிபதி அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களின் புகைப்படத்துடன் தமது புகைப்படத்தை இணைத்துக் கொள்ளல், ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுடன் செல்லிடப்பேசியில் உரையாடுவது போன்றும் பாசாங்கு செய்து மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
ஜனாதிபதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடிகள், குற்றச் செயல்களை தடுக்க விசேடப் பொலிஸ் பிரிவொன்று பௌத்தாலோக்க மாவத்தையில் அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தொழில்களைப் பெற்றுத் தருவதாகக் கோரி பணம் பெற்றுக் கொள்ளல், அரசாங்க ஒப்பந்தங்கள் பெற்றுத் தருவதாக ஏமாற்றுதல், வெளிநாட்டு தொழில் வாய்ப்பு பெற்றுத் தருவதாக உறுதியளித்து பணம் பெற்றுக்கொள்ளல், பதவி உயர்வு வழங்குவதாக உறுதியளித்து பணம் பெற்றுக் கொள்ளல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் குற்றச் செயல்கள் இடம்பெற்று வருகின்றன.
தொடர்புபட்ட செய்தி
http://www.tamilwin.com/show-RUmszARYKXnr0.html
புலிகளுக்கு எதிரான தடை நீக்கம் குறித்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்களுக்கு விளக்கம்
[ வெள்ளிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2014, 12:11.24 AM GMT ]
ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் 28 நாடுகளினதும் தலைவர்களுக்கு இவ்வாறு விளக்கம் அளிக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை நீக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதக விளைவுகள் குறித்து தெளிவுபடுத்தும் நடவடிக்கைகள், அந்தந்த நாடுகளின் இலங்கை தூதரங்களின் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி ரொட்னி பெரேராவின் தலைமையில் இந்த விளக்கம் அளிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் காலங்களில் சட்ட ரீதியான நடவடிக்கைகளின் ஊடாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருங்கிச் செயற்பட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் புலிகள் தொடர்பில் மென்மையான போக்கைப் பின்பற்றினால்ää புலிகள் அமைப்பு மீளவும் வலுப்பெறக் கூடும்.
இது தொடர்பில் சர்வதேச சமூகத்தை தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்துள்ளார்.
சிங்களப் பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர் காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARYKXnry.html
Geen opmerkingen:
Een reactie posten