[ வியாழக்கிழமை, 02 ஒக்ரோபர் 2014, 08:10.56 AM GMT ]
சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ஈழவன் மற்றும் ஈழநிலா ஆகியோர் தமது பிறந்த தினத்தை முன்னிட்டு அம்பாறை சிறார்களுக்கு கல்வி உபகரணங்களை அன்பளிப்புக்களாக வழங்கியுள்ளனர்.
திரு.திருமதி ஜெகசீலன் தம்பதிகளின் செல்வங்களான ஈழவன், ஈழநிலா ஆகியோர் தமது பிறந்த நாளான கடந்த 29ம் திகதி அன்று, அம்பாறை 4ம் கிராமத்தில் உள்ள இளங்கோ பாலர் பள்ளி, கலைமகள் பாலர் பள்ளி என்பவற்றின் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சுவிஸ் சூரிச் சிவன்கோவில், சைவத் தமிழ் தமிழ் சங்கத்தின் அன்பே சிவம் அமைப்பின் ஊடாக சுவிஸ் இந்த அன்பளிப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.
தம்மில் நேசம் கொண்டு, பிறந்த நாளை தம்மோடு பகிர்ந்து கொண்ட சுவிஸ் ஈழவன் மற்றும் ஈழநிலா ஆகியோருக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை பள்ளி மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszATWKVfu3.html
ஜனாதிபதி மகிந்தவை சந்தித்தார் போரா ஆன்மீக தலைவர்
[ வியாழக்கிழமை, 02 ஒக்ரோபர் 2014, 08:45.58 AM GMT ]
இந்த சந்திப்பு அலரி மாளிகையில் இன்று இடம்பெற்றுள்ளது.
மேற்படி சந்திப்பு மிகவும் சுமூகமானதாக இருந்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
போரா முஸ்லிம் சமூகத்தின் இன்றைய ஆன்மீக தலைவரின் தந்தையான காலஞ்சென்ற உயர்திரு செய்ட்னா அர்ஷத் ஹூசைன் சாஹேப் அவர்களின் இலங்கைக்கான இறுதி பயணம் மற்றும் அவர் நாட்டுக்கு வழங்கிய ஆசிர்வாதம் குறித்து ஜனாதிபதி இதன் போது நினைவுகூர்ந்துள்ளார்.
அதேவேளை ஜனாதிபதி தலைமையிலான இலங்கையின் துரித வளர்ச்சி மற்றும் பணிகளை ஆன்மீக தலைவர் பாராட்டியதாகவும் ஜனாதிபதியின் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszATWKVfu4.html
Geen opmerkingen:
Een reactie posten