தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 25 oktober 2014

மஹிந்தவுக்கே ஆதரவு! திகாம்பரம் திட்டவட்டம்!

புதிய வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் ஜனாதிபதி தேர்தல்?
[ சனிக்கிழமை, 25 ஒக்ரோபர் 2014, 02:16.59 PM GMT ]
2014ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை நடாத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
புதிய வாக்காளர் இடாப்புக்களை தயாரிக்கும் பணிகளை தேர்தல் செயலகம் பூர்த்தி செய்துள்ளது.
எதிர்வரும் 31ம் திகதி ஆவணங்களில் கையொப்பமிட்டு நவம்பர் மாதம் 1ம் திகதி வாக்காளர் இடாப்பு வெளியிடப்பட உள்ளது.
வாக்காளர் இடாப்பு திருத்தங்கள் கடந்த மே மாதம் 15ம் திகதி ஆரம்பானது.
மிகவும் குறுகிய காலத்தில் வாக்காளர் இடாப்பு தயாரிக்கப்பட்ட முதல் சந்தர்ப்பமாக இது கருதப்படுகின்றது.
நவம்பர் 1ம் திகதியின் பின்னர் ஓராண்டு காலத்திற்கு நடத்தப்படும ;சகல தேர்தல்களுக்கும் இந்த வாக்காளர் இடாப்பு பயன்படுத்தப்;பட உள்ளது.
வாக்காளர் இடாப்புக்கள் எதிர்வரும் 1ம் திகதி முதல் பிரதேச செயலகங்கள், பிரதேச சபைகள், கிராம அலுவலகர் காரியாலயங்கள், மாவட்டச் செயலாகங்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது.
அவசர ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து இவ்வாறு வாக்காளர் இடாப்பு தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszARZKXmq2.html
மாளுவாவே சோபித தேரர் தேர்தலில் போட்டியிட்டால் பொதுபல சேனா ஆதரிக்க வேண்டுமென உத்தரவு
[ சனிக்கிழமை, 25 ஒக்ரோபர் 2014, 02:31.43 PM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி உட்பட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மாதுளுவாவே சோபித தேரர் போட்டியிட்டால், பொதுபல சேனா பலவந்தமாக அவருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என அந்த அமைப்பை வழிநடத்தும் அரசாங்கத்தின் பிரதானி ஒருவர் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
பொதுபல சேனா அமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி டிலாந்த விதானகேவிடம் அந்த பிரதானி அண்மையில் இதனை கூறியுள்ளார்.
பொதுவேட்பாளராக மாதுளுவாவே சோபித தேரர் போட்டியிட்டால், சிறுபான்மை இனங்கள் மற்றும் முற்போக்கு கட்சிகளின் வாக்குகள் அவருக்கு கிடைக்காமல் தடுக்கும் வகையில், இனவாத கருத்துக்களை வெளியிட்டு அந்த கூட்டணியை குழப்ப நோக்கில் அந்த பிரதானி இவ்வாறான ஆலோசனையை வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடம் இருந்து மாதுளுவாவே சோபித தேரருக்கு சாதகமான சமிக்ஞைகள் கிடைத்துள்ளன.
இதனிடையே பொதுபல சேனா மற்றும் மாதுளுவாவே சோபித தேரர் இடையில் இன்று சந்திப்பொன்று நடைபெறவிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுபல சேனா அமைப்பை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவே பின்னால் இருந்து இயக்குவதாக குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது.
http://www.tamilwin.com/show-RUmszARZKXmq3.html

மஹிந்தவுக்கே ஆதரவு! திகாம்பரம் திட்டவட்டம்
[ சனிக்கிழமை, 25 ஒக்ரோபர் 2014, 02:31.52 PM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கே ஆதரவு வழங்கவுள்ளதாக பிரதியமைச்சர் திகாம்பரம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக கொழும்பு டுடே செய்திச் சேவை கேள்வியெழுப்பிய போது, தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும் பிரதியமைச்சருமான பி. திகாம்பரம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
அரசாங்கத்துடன் இணைந்திருந்தால் மட்டுமே மலையக மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியும். எங்கள் மக்களின் லயன் அறைகளுக்குப் பதிலாக காற்றோட்டமான வீடுகளை நிர்மாணித்துத் தருவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
மலையக மக்களின் காணிப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஆளுங்கட்சியுடன் இணைந்திருந்தால் மட்டுமே முடியும்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகா வெல்லக் கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவியதன் காரணமாக அவருக்கு ஆதரவளித்தோம். ஆனால் இந்தத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கே எமது ஆதரவை வழங்கவுள்ளோம் என்றும் பிரதியமைச்சர் திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARZKXmq4.html

Geen opmerkingen:

Een reactie posten