[ வியாழக்கிழமை, 02 ஒக்ரோபர் 2014, 01:00.12 AM GMT ]
தேயிலை தோட்டத்தில் கொழுந்து பறித்த பின்னர் மழைக்காக கூடாரம் ஒன்றில் தங்கியிருந்த வேளையில் கொழுந்து பறிப்பவர்களுக்கு மேற்பார்வையாளராக கடமையாற்றியவர் கையடக்க தொலைபேசியில் அழைப்பு ஒன்றை ஏற்படுத்தியுள்ளார்.
இதன் போது மின்னல் தாக்கம் ஏற்பட்டதால் அந்த இடத்தில் இருந்து இரண்டு பெண்கள் உட்பட்ட 4 பேர் கொல்லப்பட்டனர்.
அதில் மேற்பார்வையாளரும் அடங்குகிறார். மேலும் ஒருவர் காயங்களுக்கு உள்ளானார்.
மின்னல் தாக்கத்துக்கு பலியானவர்கள்- 40 வயதான மாரிமுத்து கணேசன், 25 வயதான கந்தசாமி வசந்தி, 35 வயதான சண்முகம் ஆரியவதி மற்றும் 37 வயதான அமிர்தரட்ன என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszATWKVfs7.html
சஜின் வாஸிற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கிறிஸ் நோனிஸ் கோரிக்கை!
[ வியாழக்கிழமை, 02 ஒக்ரோபர் 2014, 02:21.09 AM GMT ]
அரசாங்கத்திடம் நோனிஸ் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
அண்மையில் நியூயோர்க்கில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஜனாதிபதி மற்றும் அதிகாரிகளின் பிரசன்னத்திற்கு மத்தியில் சஜின் வாஸ் குணவர்தன, நோனிஸ் மீது தாக்குதல் நடத்தியதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
தாக்குதல் தொடர்பில் நோனிஸ் மற்றும் சஜின் வாஸ் ஆகிய இருவருமே உத்தியோகபூர்வமாக எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை.
எவ்வாறெனினும், தொடர்ந்தும் பதவியில் நீடிக்க வேண்டுமாயின் சஜின் வாஸிற்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நோனிஸ் கோரியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.
சஜின் வாஸிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென நோனிஸ் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே நோனிஸ் தமது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், ஜனாதிபதி அதனை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாடுகளில் கடமையாற்றி வரும் இலங்கை இராஜதந்திரிகளை பாதுகாக்க வேண்டிய கடப்பாடுடைய இலங்கை வெளிவிவகார அமைச்சு தாக்குதல் சம்பவம் தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.
இதன் மூலம் இராஜதந்திரிகளை ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்குவதனை வெளிவிவகார அமைச்சு அங்கீகரிக்கின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளதாக இராஜதந்திர வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszATWKVftz.html
பொலிஸ் விசாரணைகளில் திருப்தியில்லை: வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்ட லஞ்ச ஊழல் ஆணைக்குழு
[ வியாழக்கிழமை, 02 ஒக்ரோபர் 2014, 02:24.46 AM GMT ]
திருகோணமலை பிரதான சிறைச்சாலை அதிகாரி விஜயசேகர ஜயலத் என்பவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்து.
லஞ்சம் பெற்றுக்கொண்டதாகத் தெரிவித்து இந்த வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
எனினும், குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்டு வந்த விசாரணைகளில் திருப்தியில்லை என நீதிமன்றில் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் கொழும்பு நீதிமன்றில் மனு தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட்டன.
இதன் போது குறித்த வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதாக கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டியவிடம், ஆணைக்குழு அறிவித்துள்ளது.
பொலிஸாருக்கு வழங்கிய இரண்டு வாக்கு மூலங்களும் முன்னுக்கு பின் முரணாக அமைந்துள்ளது என ஆணைக்குழுவின் அதிகாரி சீ.சந்திரசிறி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
5000 ரூபா பணம் மற்றும் 6900 ரூபா பெறுமதியான செல்லிடப்பேசி ஆகியவற்றை லஞ்சமாக பெற்றுக்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொலிஸார் உரிய விசாரணைகளை மேற்கொள்ளத் தவறியுள்ளதாகவும் இதனால் வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதாகவும் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஊவா பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை
ஊவா மாகாண உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட உள்ளது.
மாகாணசபைத் தேர்தல்களின் போது உரிய முறையில் தமது கடமைகளை செய்யத் தவறிய அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட உள்ளது.
சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பண்டாரவளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு எதிராக விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் கோரியுள்ளார்.
சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரிடம் பொலிஸார் விசாரணைப் பிரிவு எதிர்வரும் நாட்களில் விசாரணை நடத்த உள்ளது.
கடந்த மாதம் 20ம் திகதி பண்டாவரளை பொலிஸ் நிலையத்தில் இரண்டு அரசியல் குழுக்கள் மோதிக் கொண்ட போது வேடிக்கை பார்த்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட உள்ளது.
பொலிஸ் மா அதிபரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் கடமை தவறி செயற்பட்ட அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன் ஓர் கட்டமாகவே பண்டவாரளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.ஜே.கருணாசேன இடமாற்றம் செய்யப்பட்டார்.
இடமாற்ற உத்தரவு காரணமாக மன உளைச்சலைடைந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கருணாசேன மாரடைப்பு ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszATWKVft0.html
Geen opmerkingen:
Een reactie posten