தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 6 oktober 2014

ஜெயலலிதாவைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்ட தமிழக சிறை அதிகாரிகள்!

பொலிஸாருடன் வாக்குவாதம்: துவாரகேஸ்வரன் யாழில் கைது
[ திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2014, 07:07.44 AM GMT ]
மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனின் சகோதரரான துவாரகேஸ்வரன் யாழ். பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு நல்லூர் செட்டித்தெரு வீதியில் வைத்து இவரைக் கைது செய்ததாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.
தற்போது, யாழ். பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவரை, நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் - கொழும்பு தனியார் பஸ் சேவையில் ஈடுபடும் பஸ்ஸின் வழித்தடலினை பொலிஸார் பார்வையிட்டுள்ளனர்.
இதன்போது, பொலிஸாருடன் துவாரகேஸ்வரன்  வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனையடுத்தே இவர் கைது செய்யப்பட்டதாக யாழ். பொலிஸார் குறிப்பிட்டனர்.
http://www.tamilwin.com/show-RUmszATaKWnxz.html
ஜெயலலிதாவைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்ட தமிழக சிறை அதிகாரிகள்!
[ திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2014, 07:31.42 AM GMT ]
தமிழக சிறை அதிகாரிகள் சிலர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலைக்குச் சென்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைப் பார்த்துள்ளனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக சென்ற அவர்கள் ஜெயலலிதாவைப் பார்த்ததும் பேச முடியாமல் உணர்ச்சிவசப்பட்டு சிறிது நேரம் அமைதியாக நின்று விட்டனராம்.
ஜெயலலிதாதான் முதலில் பேசி அவர்களை சகஜ நிலைக்குக் கொண்டு வந்தாராம்.
பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா இதுவரை யாரையும் பார்க்கவில்லை.
அவரை அவரது செல்லில் சசிகலாவும், இளவரசியும் உடன் இருந்து பார்த்துக் கொள்வதாக சிறை டிஐஜி ஜெய்சிம்மா கூறியுள்ளார்.
முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்பட யாரையும் தன்னைப் பார்க்க அனுமதிக்காமல் உள்ளார் ஜெயலலிதா.
இந்த நிலையில் தமிழக சிறை அதிகாரிகள் குழு பெங்களூர் சிறைக்குச் சென்று ஜெயலலிதாவுக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்த்து வந்துள்ளது.
அப்படியே ஜெயலலிதாவையும் பார்த்து வந்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszATaKWnx2.html

Geen opmerkingen:

Een reactie posten