இலங்கையின் நிலவரம் தொடர்பில் பிரித்தானியா தொடர்ந்தும் இலங்கை அதிகாரிகளுடனும் வேறு நாட்டு அரசாங்கங்களுடனும் பேச்சு நடத்துவதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
2013 ஆம் ஆண்டு முதல் இலங்கை அரசாங்கத்துடன் பல்வேறு சந்திப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் மற்றும் இலங்கையின் வெளியுறவு அமைச்சர் பீரிஸ் உள்ளிட்டோர் அடங்குகின்றனர்.
இதேவேளை பொதுநலவாய உயர்ஸ்தானிகர்களின் அமர்வுக்காக பிரித்தானியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதியன்று லங்ஸ்டார் இல்லத்தில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய வெளியுறவு அலுவலக அமைச்சர் ஹுகோ ஸ்வைரி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின், இலங்கையில் இரண்டு தரப்பும் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பிலான சர்வதேச விசாரணையை பிரித்தானியாவும் ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்டார்.
போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கையில் உள்நாட்டு விசாரணைகள் நடத்தப்படவில்லை.
இந்தநிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்டுள்ள யோசனையை நிறைவேற்றுவதில் பிரித்தானியா தொடர்ந்தும் நடவடிக்கை எடுத்து வருவதாக ஸ்வைரி தெரிவித்தார்.
http://links.lankasri.com/tamilwin
Geen opmerkingen:
Een reactie posten