[ வெள்ளிக்கிழமை, 14 மார்ச் 2014, 06:55.04 AM GMT ]
திருநெல்வேலியினைச் சேர்ந்த வி.பிரசாத் (19) என்ற இளைஞனே வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.
குறித்த இளைஞனை யாழ்.துரையப்பா விளையாட்டரங்கிற்கு அழைத்துச் சென்ற குழுவினர், வாளினால் வெட்டியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
வடக்கின் சமர் துடுப்பாட்டப் போட்டியில் ஏற்பட்ட முறுகல் நிலையே இந்த வாள்வெட்டுச் சம்பவத்திற்கு காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் யாழ். பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
http://links.lankasri.com/tamilwin
மாங்குளத்தில் மீட்கப்பட்ட சடலம் யாழில் கடத்தப்பட்ட ஆசிரியருடையதா?
[ வெள்ளிக்கிழமை, 14 மார்ச் 2014, 07:47.33 AM GMT ]
வவுனியா முஸ்லிம் பாடசாலையொன்றில் ஆசிரியராக கடமையாற்றிய யாழ். கோப்பாய் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேசு நிரூபன் (வயது 36) என்பவர், கடந்த வருடம் இடம்பெற்ற வட மாகாணசபைத் தேர்தல் விடுமுறைக்காக சென்ற போது காணாமல் போயிருந்தார்.
இது தொடர்பில் பொலிசார் மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் என்பவற்றில் முறையிட்டும் எந்தவிதமான பயனும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், குறித்த ஆசிரியரின் சடலம் நேற்று முன்தினம் ஏ9 அருகில் முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் மீட்கப்பட்டது. எலும்புக்கூடாகிய நிலையில் மீட்கப்பட்ட இச் சடலத்திற்கு, அருகில் குறித்த ஆசிரியரின் எனக் கருதப்படும் கைத்தொலைபேசி, குறிப்புப் புத்தகம், துவிச்சக்கர வண்டித் திறப்பு, கறுப்பு நீளக் காற்சட்டை உள்ளிட்ட சில தடயப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளது.
இவற்றையடுத்தே அச்சடலம் குறித்த ஆசிரியருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இது தொடர்பில், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கையில்,
வவுனியாவில் கற்பித்த ஆசிரியர் கடத்தப்பட்டு தற்போது எலும்புக்கூடாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதை கண்டித்து, வட மாகாண ஆசிரியர்களை ஒன்றிணைத்து பாரிய போராட்டமொன்றினை நடத்தவுள்ளதாக தெரிவித்தார்.
போர் முடிவடைந்து 3 வருடங்களுக்கு மேலாகியுள்ள நிலையில், ஆசிரியர் ஒருவர் கடத்தப்பட்டு அவருடைய எலும்புக்கூடு கிடைத்திருப்பதை, இலங்கை ஆசிரியர் சங்கம் என்ற வகையில் நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். அத்துடன் ஆசிரியர் கடத்தப்பட்டு எலும்புக்கூடு கிடைக்கும் வரையிலான நிலைமை காணப்படுகின்றது என்றால், அது வட மாகாணத்தில் பாதுகாப்பை கேள்விக்கு உட்படுத்தியுள்ளது.
ஆசிரியர் கடத்தப்பட்ட விடயம் தொடர்பாக 2013 நவம்பர் மாதம் நாம் ஆர்ப்பாட்டம் ஒன்றினை செய்திருந்ததோடு, மனித உரிமை ஆணைக்குழுவிற்கு முறைப்பாட்டையும் பதிவு செய்திருந்தோம். அத்துடன், பொலிஸ் மா அதிபரிடமும் முறைப்பாடு செய்திருந்தோம். ஆனாலும் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அத்துடன் எமக்கு மனித உரிமை ஆணைக்குழு உட்பட யாரும் பதில் கூட அனுப்பவில்லை.
இவ்வாறான நிலையிலேயே எலும்புக்கூடு கிடைத்துள்ளது. எனவே, வட மாகாணத்தில் சகல ஆசிரியர்களும் ஒன்றிணைந்து, இனி வரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது இருப்பதற்கும் இச் செயலை கண்டித்தும் பாரிய செயற்பாடொன்றினை முன்னெடுக்கவுள்ளோம் என தெரிவித்தார்.
http://links.lankasri.com/tamilwin
Geen opmerkingen:
Een reactie posten