இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று காலை மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரன் தலைமையில், மகாத்மா காந்தி பூங்காவுக்கு முன்னால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.அருமைலிங்கம் உட்பட முன்னாள் மாநகர சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது, “நவநீதம்பிள்ளையே உனது பக்க சார்பான நடவடிக்கையை உடன் நிறுத்து”, “அமெரிக்காவே உன் பிரித்தாலும் தந்திரத்திற்கு நாம் ஏமாறமாட்டோம்”, “இலங்கையின் இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் குந்தகம் விளைவிக்காதே”, “அமெரிக்க ஏகாதிபத்தியமே புலிப் பயங்களரவாதிகளின் தாளத்திற்கு ஆடாதே” போன்ற வசனங்கள் எழுதப்பட்ட சுலோகங்களையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.
http://links.lankasri.com/tamilwin
Geen opmerkingen:
Een reactie posten