தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 14 maart 2014

சந்திரிகா - ரணில் சந்திப்பு: அச்சத்தில் அரசாங்கம் !

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் கீழ் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் அச்சமடைய வேண்டியதில்லை என்று எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அவிஸ்ஸாவளைப் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமானது தொழில்வாய்ப்புகளை உருவாக்கும் நிர்வாகமாகவே இருக்கும்.
அமெரிக்காவிலிருந்தும், ஐரோப்பிய நாடுகளில் இருந்து முதலீடுகள் கொண்டுவரப்படும். பொருளாதார சந்தைகள் உருவாக்கப்படும் என்றும் எதிர்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.
தற்போதைய அரசாங்கத்தை நீண்டகாலத்திற்கு முன்னெடுத்துச் செல்ல முடியாது. ஆளும் கட்சி நிர்வாகத்திற்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.  எனவே, ஆளும் கட்சிக்கு வாக்களிப்பதில்லை பயனில்லை.
இதேவேளை, அண்மையில் தாம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவை சந்தித்து கலந்துரையாடியமையை அடுத்து அரசாங்கம் அச்சம் கொண்டிருப்பதாக எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இதனால் தம்மை அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் குற்றம் சுமத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக சூழ்ச்சிகளை மேற்கொள்கிறீர்களா என்றும் சிலர் தம்மிடம் வினவுவதாகவும், ஆனால், தமக்கு அதற்கான நேரம் இல்லை என்று தாம் பதிலளித்ததாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten