தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 14 maart 2014

எனது தந்தையின் மரணத்திற்கு அரசாங்கம் பொறுப்பல்ல: ஹிருணிகா!



எனது தந்தையின் மரணத்துக்கு அரசாங்கம் அல்ல, தனிநபர் ஒருவரே பொறுப்பு என ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
மேல் மாகாண சபை தேர்தலை முன்னிட்டு “ஹிருணிகா உங்களின் குரல்" என்ற இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தந்தையின் மரணத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு. அதனை நீதிமன்றத்தின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என நான் நம்புகிறேன் என்றார்.
இதேவேளை, தன்னை பிரபல மாக்கியது ஊடகங்களே. அதனை நான் மறக்கமாட்டேன். இருப்பினும் தற்போது இணையத்தளங்களினூடாக என்னைப்பற்றி மிகவும் மோசமான முறையில் செய்திகள் வெளயிடப்படுகின்றன.
இச்செய்திகள் முற்றிலும் தவறானது. இந்நாட்டின் கலாசாரம் மற்றும் ஒழுக்கவியல்களுக்கு அமைவாகவே பெற்றோர்கள் என்னை வளர்த்துள்ளனர் என ஹிருணிகா குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten