தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 15 maart 2014

இலங்கை பிரச்சினை தொடர்பில் கொமன்வெல்த் எதனையும் செய்யவில்லை!- குற்றச்சாட்டை மறுக்கும் கமலேஷ் சர்மா !



இலங்கை பிரச்சினையில் பொதுநலவாய நாடுகள் அமைப்பு எதனையும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை அதன் செயலாளர் கமலேஷ் சர்மா மறுத்துள்ளார்.
லண்டனில் நேற்று நடைபெற்ற பொதுநலவாய அமைப்பின் அமைச்சர்களின் நடவடிக்கை குழுக் கூட்டத்தின் செயலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் சிறந்த விடயங்களில் ஈடுபட இலங்கை ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு நான் இலங்கை சென்ற போது, பொதுநலவாயம் இலங்கையுடனான ஒரு கூட்டுத்திட்டத்திற்கு இணக்கம் ஏற்படுத்தப்பட்டது.
அது 10 வித்தியாசமான தடங்களை கொண்டது. அதனையும் அதன் முன்னேற்றங்களையும் எமது இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.
ஒவ்வொன்றும் வித்தியாசமான வேகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நல்லிணக்கம், சித்திரவதைகள், மனித உரிமை போன்ற கடினமான பிரச்சினைகள் தொடர்பாகவும் உரிய முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொதுநலவாய அமைப்பின் முறையில் நாங்கள் பணியாற்றி வருகின்றோம்.
மனித உரிமை மற்றும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்தும் தேசிய முயற்சிகளுக்கு நடைமுறை சாத்தியமான உதவிகளை நாங்கள் வழங்கி வருகிறோம்.
பொதுநலவாயத்தின் மதிப்புகளை அமுல்படுத்துவது தொடர்பில் நாங்கள் உறுப்பு நாடுகளை ஊக்குவித்து வருகிறோம்.
பொதுநலவாயம் போதுமான பணிகளை மேற்கொள்ளவில்லை என்பது தவறானது.
நான் கூறியது போல் 10 தடங்கள் உள்ளன. அவற்றை நாங்கள் மேம்படுத்தி வருகின்றோம். கடினமான பிரச்சினைகளை நாங்கள் தவிர்க்க முயற்சிக்கவில்லை.
இலங்கையின் மனித உரிமை பிரச்சினைகள் தொடர்பில் நாங்கள் நெருக்கமாக பணியாற்றி வருகின்றோம் என்றார்.
http://news.lankasri.com/show-RUmsyDSZLVfr2.html

Geen opmerkingen:

Een reactie posten