தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 15 maart 2014

மீண்டும் அனைத்துலக ஊடகங்களின் கவனத்தினைப் பெற்ற சிறுமி விபூசிகா: இலங்கைக்கு மற்றுமொரு நெருக்கடி!

இலங்கைப் படையினரால் கடத்தப்பட்ட தாயும் மகளினதும் விவகாரம் முக்கிய இடத்தினைப் பிடித்துள்ளது. இத்தகவலை அனைத்துலக ஊடகங்களான ஏபி( AP) மற்றும் சனல்-4 ஆகியன வெளியிட்டுள்ளன.
14 வயதுடைய சிறுமி விபூசிகா மற்றும் அவரது தாயார் இலங்கை படையினரால் கடத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகிய மறுகணமே, இவ்விவகாரத்தினை EINPRESSWIRE எனும் அனைத்துலக செய்தி வழங்கியூடாக அனைத்துலகத்தின் கவனத்தினைப் பெற்றுள்ளது.
காணாமல் போனவர்களின் உறவினர்களது தொடர் போராட்டங்களில் அனைத்துலகத்துலக ஊடகங்களின் கவனத்தினைப் ஏலவே இவ்விருவரும் பெற்றிருந்த நிலையில், குறித்த கடத்தல் சம்பவம் மீண்டும் அவர்கள் மீதான அனைத்துலகத்தின் கவனத்தினைப் பெற்றுள்ளது.
தமிழீழத் தாயகத்தின் கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் இலங்கை படையினரால் கடத்தப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டு, தாயார் ஜெயக்குமாரி அவர்களுக்கு 3 மாத தடுப்புக்காவலும், 14 வயது சிறுமி விபூசிக்காவுக்கு சிறுவர் நன்னடத்தை முகாமும் என, கிளிநொச்சி நீதிமன்றம் வெள்ளி இரவு உத்தரவிட்டிருந்தது.
இவ்விவகாரத்தில் அனைத்துலக மட்டத்தினால் கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாகவே, கடத்தப்பட்ட இவ்விருவரையும் கைது செய்யததாக இலங்கை அரச வட்டாரங்கள் வியாக்கியானம் புரிந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
http://news.lankasri.com/show-RUmsyDSYLVfo6.html

Geen opmerkingen:

Een reactie posten