கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்க போராளிகள் சிலர் நடமாடுவதாக, இலங்கை பாதுகாப்பு அமைச்சுக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் அந்த பகுதியில் இராணுவத்தினரை எச்சரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக அந்த பகுதிகளில் திடீர் சுற்றுவளைப்பு தேடுதல்களையும் அடிக்கடி மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு அமைச்சு இராணுவத்தினருக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்அடிப்படையிலேயே கிளிநொச்சி - தர்மபுரம் பகுதியில் வைத்து இலங்கை பாதுகாப்பு படையினர் ஜெயகுமாரி மற்றும் அவரது மகளையும் கைது செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
Geen opmerkingen:
Een reactie posten