கைதுகள் மற்றும் கடத்தல்களினால் வன்னி மீண்டும் அதிரத்தொடங்கியுள்ளது. அவ்வகையில் கொழும்பை தளமாக கொண்ட மனித உரிமை ஆர்வலர்கள் இருவர் கிளிநொச்சியில் கைதுசெய்யப்பட்டு கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மனித உரிமை செயற்பாட்டாளர்களான ரூக்கி பெர்னாண்டோ மற்றும் அருட்தந்தை பிரவீன் அடிகளார் இருவருமே நேற்றிரவு கிளிநொச்சியில் வைத்து பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் அவர்கைள மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக நேற்று இரவே கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
ருக்கி பெர்னாண்டோ கொழும்பை தளமாக கொண்ட மனித உரிமைகள் ஆவண மையத்தின் (இன்போர்ம்) மனித உரிமைகள் ஆலோசகராக கடமை ஆற்றிவருகின்றார். அருட் தந்தை பிரவீன் அடிகளார் யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்டு இயங்கும் அமைதிக்கும் நல்லிணக்கத்திற்குமான அமைப்பின் இயக்குநராவார். இவரது அமைப்பு பல தடைவைகள் படையினரது தாக்குதல்களிற்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவர்கள் இருவரும் அண்மையில் கிளிநொச்சி தர்மபுரத்தில் கைது செய்யப்பட்ட பாலேந்திரன் ஜெயக்குமாரி அவரின் மகள் பூர்விகா ஆகியோருடைய கைது தடுத்து வைப்பு குறித்தும் விபரங்களை திரட்டும் வகையில் கடந்த இரு நாட்களாக மோட்டார் சைக்கிளில் அப்பகுதியெங்கும் பயணித்துள்ளனர்.
http://www.lankaroad.com/index.php?subaction=showfull&id=1395053404&archive=&start_from=&ucat=1&
Geen opmerkingen:
Een reactie posten