அதேவேளை முதலாவது வரைவில் ஒற்றைப் பந்தியில் உள்ளடக்கப்பட்டிருந்த பன்னாட்டு விசாரணை தொடர்பான எட்டாவது சரத்து தற்போதைய வரைவில் மூன்று உப பந்திகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதில் இலங்கையில் இரு தரப்பினராலும் இழைக்கப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் செயலகத்திற்கு விடுக்கப்பட்ட கோரிக்கை நீக்கப்பட்டு பின்வரும் சொல்லாடல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன:
‘‘தொடரும் மனித உரிமை மீறல்கள் பற்றியும், காத்திரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய நம்பகமான உள்நாட்டுப் பொறிமுறை இல்லாத சூழலில் பன்னாட்டு விசாரணைப் பொறிமுறை ஏற்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் மனித உரிமைகள் ஆணையாளரால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் முன்மொழிவுகளும், முடிவுகளும் கவனத்தில் கொள்ளப்படுவதோடு அவருக்குப் பின்வரும் கோரிக்கைகள் விடுக்கப்படுகின்றன: அ) இலங்கையின் மனித உரிமைச் சூழல் தொடர்பாகவும், உள்நாட்டுப் பொறிமுறைகளில் ஏற்படும் முன்னேற்றம் குறித்தும் கண்காணிப்புக்களை மேற்கொள்க. ஆ) குற்றம் செய்தவர்களைப் பொறுப்பாளிகளாக்குவதற்கும், இழைக்கப்பட்ட தவறுகள் தொடராதிருப்பதற்கும் ஏதுவாக இரு தரப்பினராலும் இழைக்கப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்படும் பாரதூரமான தவறுகள், மனித உரிமை மீறல்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய குற்றங்கள் தொடர்பான முழு அளவிலான விசாரணைகளை தகமை மிக்க நிபுணர்களின் உதவியுடன் தலைமை தாங்கி, இழைக்கப்பட்ட தவறுகள் – குற்றங்களின் பின்புலத்தையும், அவை பற்றிய உண்மைகளையும் நிலைநாட்டுக. இ) இவை பற்றிய வாய்மூல அறிக்கையை மனித உரிமைகள் பேரவையின் இருபத்தேழாவது அமர்விலும், இத்தீர்மானத்தை அமுல்படுத்துவது தொடர்பான முழு அளவிலான அறிக்கையை விவாதத்திற்கான நிகழ்ச்சி நிரலை உள்ளடக்கும் வகையில் இருபத்தெட்டாவது அமர்விலும் சமர்ப்பிக்குக.’’
http://www.jvpnews.com/srilanka/62752.html

Geen opmerkingen:
Een reactie posten