தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 5 maart 2014

ஜெனீவாவில் வாக்கெடுப்புக்கு முன்னர் இந்தியாவின் நிலைப்பாடு வெளியாகும்: குர்ஸித்!

இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்னர் இந்தியா தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் இந்த உறுதிமொழியை இந்தியா, இலங்கைக்கு வழங்கியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
மியன்மாரில் இடம்பெற்ற பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்றப் பின்னர் நாடு திரும்பிய அவர் செய்தியாளர்களிடம் இந்தக்கருத்தை வெளியிட்டார்.
இந்திய பிரதமரும் இலங்கை ஜனாதிபதியும் நேற்று மியன்மாரில் சந்தித்து பேச்சு நடத்தினர். இதன்போது ஜெனீவா பிரேரணை உட்பட்ட விடயங்களும் பேசப்பட்டன.
இந்தநிலையில் ஜெனீவாவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணையை இந்தியா இன்னும் உரிய வகையில் வாசித்தறியவில்லை என்று மன்மோகன்சிங், மஹிந்தவிடம் தெரிவித்தார்.
வடக்கில் கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கைகள் முடிவடைந்தும் மேலும் படையினரை விலக்கிக்கொள்வது குறித்து மஹிந்த ராஜபக்ச இதன்போது இந்திய பிரதமரிடம் உறுதிவழங்கியுள்ளார்.
இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்காக தமிழ் கட்சிகள் இலங்கையின் நாடாளுமன்ற குழுவில் பங்கேற்பதற்கு இந்தியா உதவவேண்டும் என்று மஹிந்த ராஜபக்ச இந்திய பிரதமரிம் கேட்டுக்கொண்டார்.
எனினும் தாம் வடக்குக்கு சென்றிருந்த போதும் ஒருவராவது இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட விருப்பம் தெரிவிக்கவில்லை என்பதை இதன்போது மஹிந்த ராஜபக்சவிடம் தாம் சுட்டிக்காட்டியதாக குர்ஸித் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இலங்கையர்களும் அதேபோல தமிழ் நாட்டில் உள்ளவர்களும் தமது நண்பர்கள். எனினும் தமிழகத்தில் உள்ளவர்கள் மத்தியில் வடக்கு மக்கள் தொடர்பில் உணர்வுகள் இருப்பதை தாம் ராஜபக்சவிடம் சுட்டிக்காட்டியதாக குர்ஸித் கூறினார்.
எவருக்கும் தமது அரசியல் உரிமைகள் குறித்து பேசமுடியும் செயற்படமுடியும். எனினும் இதன்போது தேசிய நலன் கருத்திற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என்று குர்ஸித் குறிப்பிட்டார்.

Geen opmerkingen:

Een reactie posten