இலங்கைக்கு எதிரான தீர்மானம்! அனைவருக்கும் பெரும் ஏமாற்றம்: கருணாநிதி
[ புதன்கிழமை, 05 மார்ச் 2014, 07:03.14 AM GMT ]
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஐநா மனித உரிமை ஆணைக்குழுவில் அமெரிக்காவால் சமர்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைபு, தமிழ் மக்களையும், சிங்கள தீவிரவாதிகளையும் ஒருசேர ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது. என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், கொண்டு வரவிருக்கும் தீர்மானம்,பெருமளவுக்கு தீர்வு காண்பதாக இருக்கு மென்று உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், ஆணையக் கூட்டத்தில் பரிசீலனைக்காக வைக்கப்பட்டிருக்கும் வரைவுத் தீர்மானம் அனைத்துத் தரப்பிலும் பெருத்த ஏமாற்றத்தையே ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இலங்கையில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாகவே சென்று விரிவாக கள ஆய்வு நடத்தியதோடு பாதிக்கப்பட்ட தமிழர்களைச் சந்தித்து அவர்களுடைய துன்ப துயரங்களை விசாரித்தறிந்து, வழங்கிய அறிக்கை உலகத் தமிழர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியது.
நடந்து முடிந்து போன நிகழ்வுகள் குறித்து விசாரிப்பதற்குத் தேவையான அரசியல் உறுதி இலங்கை அரசுக்கு இல்லை என்றும், இலங்கை அரசு தொடர்ந்து சர்வாதிகார திசையில் பயணித்து வருகிறது என்றும், நவநீதம்பிள்ளை தனது அறிக்கையிலே தெளிவாகச் சுட்டிக்காட்டியிருந்துங்கூட, அமெரிக்காவின் வரைவுத் தீர்மானம் நவநீதம் பிள்ளையின் ஆய்வறிக்கையில் உள்ள நுட்பமான சிந்தனைகளைச் சிறிதும் கவனத்தில் கொள்ளவில்லை.
இலங்கைச் சிங்கள அரசுக்கு மேலும் கால அவகாசம் வழங்கிடும் வகையில் வரைவுத் தீர்மானம் அமைந்திருக்கிறது. தற்போது அமெரிக்காவின் வரைவுத் தீர்மானத்தில் அரசியல் தீர்வு பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது.
ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என்பது இலங்கை வடக்கு மாகாணத்தில் தேர்தலை நடத்தி அதிகாரமில்லாத ஓர் அரசாங்கத்தை ஏற்படுத்துவதல்ல, ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தீர்வு எது என்பதனை அவர்களே நிர்ணயித்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளை உலகச் சமுதாயம் செய்ய முன் வந்தால்தான், அவர்களுக்கு நீதி கிடைத்ததாகச் சரித்திரம் பதிவு செய்யும்.
ஏற்கனவே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இரண்டு முறை நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எவ்வித ஆக்கப் பூர்வமான விளைவையும் ஏற்படுத்தவில்லை. அதைப் போலவே தான் இந்தத் தீர்மானமும் இலங்கை அரசால் புறக்கணிக்கப்பட்டு எந்தப் பயனையும் ஈழத் தமிழர்களுக்கு வழங்கிடப் போவதில்லை.
எனவே “டெசோ” சார்பிலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் பல முறை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டபடி இந்திய அரசே ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்தில் தனித் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்து, அதனை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வது தான் உகந்தவழியாக இருக்க முடியும்.
இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள்,போர்க் குற்றங்கள், இனப் படுகொலை ஆகியவை குறித்து சுதந்திரமான, நம்பகத்தன்மை வாய்ந்த, சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றும், ஈழத்தமிழர்கள் தங்களுக்குத் தேவையான அரசியல் தீர்வை, அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வண்ணம் ஐ.நா. மேற்பார்வையில், ஏற்கனவே சிலநாடுகளில் நடத்தியதைப் போல, “பொது வாக்கெடுப்பு” நடத்தப்பட வேண்டுமென்றும் தீர்மானத்தை இந்திய அரசு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் கொண்டு வந்து நிறைவேற்றுவதே ஈழத் தமிழர்களுக்கும், உலகெங்கிலும் வாழும் தமிழர்களுக்கும், தமிழகத்திலே வாழும் தமிழர்களுக்கும், தமிழ் அமைப்புகளுக்கும் நிறைவளிக்கக் கூடிய காரியமாக அமையும் என குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் தீர்மான வரைபு தமிழர்களையும், சிங்கள தீவிரவாதிகளையும் ஏமாற்றியுள்ளது!- மனோ கணேசன்
[ புதன்கிழமை, 05 மார்ச் 2014, 10:18.07 AM GMT ]
அமெரிக்கா உட்பட சர்வதேச சமூகம் ஒரு துணைக்கருவியே தவிர அது மாத்திரம் எமக்கு நிம்மதியையும், நியாயத்தையும் கொண்டுவந்து தந்து விடாது என்றும், உள்நாட்டிலே இந்த அரசுக்கு எதிரான ஜனநாயக போராட்டம் மற்றும் தென்னிலங்கை அரசியல் நகர்வுகள் மூலமாகவே தமிழ் மக்கள் நியாய இலக்கை அடைய முடியும் என நாம் எப்போதும் சொல்லி வந்தது இன்று சரியாகியுள்ளது எனவும் மனோ கணேசன் தெரிவித்தார்.
ஐ.நாவினை மையப்படுத்திய இலங்கை விவகாரத்தில் அனைத்துலக விசாரணையை நோக்கிய நீதிக்கான போராட்டம் தொடரும் என ஜெனீவாவில் தமிழர் தரப்பு பிரதிநிதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று கொழும்பில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
இலங்கை வந்து செல்லும் அமெரிக்க அரச பிரமுகர்கள் வரிசையாக வடக்குக்கு சென்று பேச்சுவார்த்தைகள் நடத்திய போதிலும், துன்புற்று வாழும் தமிழ் மக்களின் துன்பங்களுக்கு அவர்கள் முன்னுரிமை கொடுக்கவில்லை என இன்று தெரிய வந்துள்ளது.
சர்வதேச விசாரணை என்று ஆரம்பத்தில் சொல்லப்பட்ட போதும், இன்று அமெரிக்க அரசு இலங்கை அரசுக்கு மீண்டும் கால அவகாசம் கொடுத்துள்ளது என்பதுதான் நிதர்சனம். அதேபோல் அமெரிக்க தீர்மானம் மூலம் "இதோ, அதோ வருகிறது, மின்சாரக்கதிரை " என கோஷமிட தயாராக இருந்தவர்களுக்கும் இந்த தீர்மான வரைபு ஏமாற்றத்தை தந்துள்ளது.
இவை ஜனநாயக மக்கள் முன்னணிக்கு ஆச்சரியம் இல்லை. ஆனால், எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு ஏமாற்றம் ஆகும்.
கைது செய்யப்பட்டு, சரணடைந்து, கடத்தப்பட்டு சிறைகூடங்களில் வாடும் தமிழ் கைதிகளின் பிரச்சினைக்கு தீர்வு இல்லை. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர், அனைத்து சிறைக்கூடங்களிலும், உண்ணாவிரத போராட்டத்தை நடத்திய கைதிகளுக்கு விசேட நீதிமன்றங்களை அமைப்போம் என அமைச்சர்கள் நிமல் சிறிபாலவும், ரவுப் ஹக்கீமும் உத்தரவாதம் வழங்கினார்கள். இன்று வரிசையாக கைதிகள் இறந்து போவதை தவிர எதுவும் மாற்றம் பெறவில்லை.
சமீபத்தில் என்னை சந்தித்த ஒருகாலத்தில் மலையகத்தில் இருந்து சென்று வன்னியில் குடியேறி வாழும் ஒரு தமிழ் தாய் இப்படி சொன்னார். " ஐயா, என் கணவனை கடத்தி போனார்கள். மகனையும் இராணுவம் பிடித்துகொண்டு போனது.
இப்போது என் பிரச்சனை என் கணவரையும், மகனையும் தேடுவது அல்ல. என் பருவ வயது மகளையும், என்னையும் பாதுகாத்து கொள்வதே என் போராட்டம்". இது போர் முடிந்த வலயத்தில் வாழும் சுமார் ஒரு இலட்சம் நிர்க்கதியாயுள்ள தமிழ் மகளிரது கண்ணீர் படலத்தின் ஒரு சிறு துளி.
வடக்கு மாகாணசபை எப்படி நடக்கிறது என மன்மோகன் சிங், நமது ஜனாதிபதியை கேட்டாராம் என ஊடக செய்தி கூறுகிறது. அதற்கான பதிலை வழங்கக்கூடிய பொருத்தமான நபர் விக்கினேஸ்வரன் ஆகும். அவர் அதை ஏற்கனவே கூறிவிட்டார்.
வடமாகாணசபை என்ற வெற்று பாத்திரத்தையே தொடர்ந்து தூக்கிக்கொண்டு இருக்க வேண்டும் என அரசு நினைப்பதை பட்டவர்த்தனமாக விக்கினேஸ்வரன் கூறிவிட்டார்.
இவற்றையெல்லாம் அமெரிக்க வரைபு கணக்கில் எடுக்கவில்லை. சர்வதேச சமூகம் அல்லது அமெரிக்கா அனைத்து தீர்வுகளையும் அள்ளி வழங்கும் என, உள்நாட்டு ஜனநாயக போராட்டங்களை ஒத்தி வைக்க கூடாது. சர்வதேச சமூகம் அவசியம்தான். ஆனால், அது துணைபாத்திரம்தான் வகிக்க முடியும்.
நாம் வாழும் பூமியில் நாம் அரசியல்ரீதியாக பலமாக எம்மை நிலைநிறுத்திக்கொண்டு ஜனநாயக போராட்டங்களை முன்னெடுப்போம் என்றும், தென்னிலங்கை அரசியல் நகர்வுகளுடன் ஒன்றிணைவோம் என்றும் நாம் சொல்லி வந்தவை சரியாக அமைந்து விட்டன.
சர்வதேச விசாரணையை நோக்கிய நீதிக்கான போராட்டம் தொடரும்! ஜெனீவாவில் தமிழர் தரப்பு பிரதிநிதிகள் கருத்து!
[ புதன்கிழமை, 05 மார்ச் 2014, 03:20.37 PM GMT ]
இலங்கை தொடர்பில் அமெரிக்காவினால் சமர்பிக்கப்பட்டுள்ள தீர்மான நகல் தொடர்பில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வரும்நிலையில் இக்கருத்தினை தமிழர் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழர் தாயகப் பிரதிநிதிகளும் புலம்பெயர் தமிழர் பிரதிநிதிகளும் ஒருமித்த குரலில் அனைத்துலக விசாரணையினை நோக்கிய களச்செயற்பாட்டில் ஜெனீவாவில் ஈடுபட்டுள்ளனர்.
அனைத்துலக விசாரணையினை தெளிவாக வலியுறுத்தும் வகையிலான தீர்மானத்துக்கு, இந்திய மத்திய அரசினை வலியுறுத்தும் பொருட்டு ,தமிழக கட்சிகளும் அமைப்புக்களும் காத்திரமான களச்செயற்பாட்டினை மேற்கொள்ள வேண்டிய தருணம் இதுவென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதி சுதன்ராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தமிழர் தாயகத்தின் வட மாகாண சபைத் பிரதிநிதி சிவாஜிலிங்கம் அவர்களும் சுதந்திரமான அனைத்துலக விசாரணையினை தாயகத் தமிழ்மக்கள் வேண்டி நிற்பதாக தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten