இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு தாங்களே தீர்வு காண வேண்டுமென தென் ஆபிரிக்கா தெரிவித்துள்ளது.
தென் ஆபிரிக்காவின், சர்வதேச உறவுகள் மற்றும் கூட்டுறவு அமைச்சர் Emily Nkoana-Mashabane, ஐ.நாவின் மனித உரிமைகள் மாநாட்டில் இன்று உரையாற்றும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தொடர்பான பிரச்சினைகளுக்கு சர்வதேச சமூகம் தீர்வைக் கண்டுபிடிக்க இந்த 25வது மனித உரிமைகள் மாநாடு மிக முக்கியமானதொன்றாக கருதப்படுகிறது.
எங்களுடைய சொந்தப் பிரச்சினைகளை கண்டறிந்து, அவற்றிற்கு நாமே தீர்வு காண வேண்டும். இதனையே இலங்கையும் கடைப்பிடிக்க வேண்டுமென தென்னாபிரிக்க மக்கள் விரும்புகின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையின் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கடந்த மாதம் ஆபிரிக்காவிற்கு விஜயம் செய்து, அந்நாட்டு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்ததுடன், தென் ஆப்பிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுடனும் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten