அனுராதபுரத்திற்கு மேல் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களில் பரவியுள்ள ஹெரோயின் போதைப் பொருள் தொடர்பில் கவனத்தில் கொள்ள தேவையில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அந்த பிரதேசங்களில் போதைப் பொருளை அனுமதிப்பது ஒரு தந்திரோபாயம் எனவும் அந்த பகுதிகளில் தேடுதல்களை நடத்த வேண்டாம் எனவும் அங்கு போதைப் பொருள் பாவனையை அனுமதிக்குமாறும் அபபோது பிரச்சினைகள் குறையும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் பாதுகாப்புச் செயலாளர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்புச் செயலாளர் இவ்வாறு தெரிவித்ததை அடுத்து, பாதுகாப்புச் சபையின் உறுப்பினர்கள் முகத்தை ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டதாக கூறப்படுகிறது.
நாடு முழுவதும் தொற்று நோய் போல் பரவி வரும் ஹெரோயின் போதைப் பொருளை கட்டுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பாதுகாப்புச் செயலாளர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.
போதைப் பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்த இலங்கை எடுக்க போகும் நடவடிக்கைகள் குறித்து சர்வதேச நாடுகள் கவனம் செலுத்தி வரும் நிலையிலேயே இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது.
போதைப் பொருள் தடுப்பு தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் போதிய அக்கறை காட்டுவதில்லை. அத்துடன் போதைப் பொருள் தடுப்பு தொடர்பிலும் அவர் மந்தமான நிலைப்பாட்டையே கொண்டுள்ளார்.
பாதுகாப்புச் சபைக் கூட்டம் பாதுகாப்புச் செயலாளர் தலைமையில் கூடிய போதும் போதைப் பொருளை கட்டுப்படுத்துவது குறித்து அவர் எந்த யோசனைகளையும் முன்வைக்கவில்லை.
போதைப் பொருளை கட்டுப்படுத்துவது குறித்து எந்த யோசனைகளையும் முன்வைக்காத பாதுகாப்புச் செயலாளர் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் தேடுதல்கள் மற்றும் விசாரணைகளுக்கு தடையேற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இலங்ரகை தெற்கு மற்றும் தென்கிழக்காசியாவின் போதைப் பொருள் விநியோக மத்திய நிலையமாக மாறியுள்ளதாக சர்வதேச போதைப் பொருள் தடுப்பு பிரிவு கருதி வருகிறது.
போதைப் பொருள் விற்பனை இலங்கையின் கையை விட்டு சென்று விட்டால், அதனூடாக பெருமளவிலான கறுப்பு பணம் இலங்கையின் பொருளாதாரத்தை விட்டு சென்று விடும் என தவறாக எண்ணி வரும் அரசாங்கம், இலங்கையில் போதைப் பொருள் விற்பனை செய்யப்பவது தொடர்பில் அசமந்த கொள்கையை பின்பற்றி வருகிறது
Geen opmerkingen:
Een reactie posten