தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 17 maart 2014

சிங்களப்படை கையில் சிக்கி தவிக்கும் 7மாத கருவை சுமந்துநிற்கும் தமிழ்த்தாயை காக்க ஒன்றுபட்டு எழுந்திடுவீர்.


ஜெனீவா தீர்மானத்துக்கு ஆதரவாகவும் தமிழர் தாயகப்பகுதியில் நடைபெற்ற இனப்படுகொலை கைது கடத்தல் காணாமல்போகச்செய்தல் என்பனவற்றுக்கு நீதி கேட்டும் தமிழர் தாயகப்பகுதிகளில் இலட்சக்கணக்கான உறவுகளை இழந்து தவிக்கும் மக்களால் அண்மையில் ஜனநாயக ரீதியில் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற விடயம் அனைவரும் அறிந்ததே. இந்த வகையில் இந்தப்போராட்டத்துக்கு வலுச்சேர்க்குமுகமாக பாதிக்கப்பட்ட மக்களால் அண்மையில் பல சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு சுவரொட்டி ஒட்டியதாக ஒரு தமிழ்மகனை நூற்றுக்கணக்கான சிங்களப்படைகளும் சிங்கள புலனாய்வாளர்களும் தேடிவந்த செய்தி அண்மையில் பரவலாக பேசப்பட்டு வெளிவந்த விடயம். ஜனநாயக போராட்டத்தில் ஈடுபட்ட அந்த தமிழ்மகனை தேடிய சிங்கள படைகளும் சிங்கள புலனாய்வாளர்களும் 11-03-2014 அன்று திருகோணமலையில் வசித்து வந்த அந்த தமிழ்மகனின் துணைவியும் 4 அகவை குழந்தையின் தாயும் மற்றும் 7 மாத கர்ப்பிணியுமான 26 அகவையுடைய பாலகுருபரன் தர்மிலா என்ற ஏதுமறியா தாயை கைது செய்துள்ளது.
திருகோணமலையிலுள்ள தர்மிலாவின் வீட்டுக்கு சென்ற சிங்கள படைகளும் படைபுலனாய்வாளர்களும் தர்மிலாவின் பெற்றோரை மிரட்டியதுடன் தாயைச் பிடித்துச்செல்லமுற்பட்ட வேளை கதறியழுத அந்த 4 அகவை பாலகனையும் இரக்கமின்றி தாக்கிவிட்டு கைதுசெய்து கொழும்பு 4ம் மாடியில் அடைத்து வைத்து விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தியுள்ளனர்.
தற்போது 7 மாத கருவை வயிற்றில் சுமந்தபடியுள்ள தர்மிலா என்ற அந்த தாய் 4ம் மாடியில் சித்திரவதை முகாமில் இருந்து மாற்றப்பட்டுள்ளதாகவும் தற்போது அவர் எங்கு இருக்கின்றார் என்ற செய்தி அவரது குடும்பத்தினருக்கோ உறவினர்களுக்கோ எந்த ஒரு மனிதஉரிமை அமைப்புகளுக்கோ தெரியாத விடயமாகவே இருந்துவருகிறது.
இதனால் இந்த இளம் கர்ப்பிணிதாயின் நிலை தெரியாது அவரது குடும்பம் சொல்லணா வேதனையில் துடித்துக்கொண்டிருக்கின்றது. இந்த விடயத்தை எங்கே முறையிடுவது யாரிடம் முறையிடுவது எப்படி கர்ப்பிணிதாயான தங்கள் மகளை காப்பாற்றுவது என்று தெரியாது தர்மிலாவின் பெற்றோரும் உறவினர்களும் அவதிப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.
உண்மையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாகவே கணவனை தேடி தர்மிலாவும் தந்தையைத் தேடும் பிள்ளையுமாக அவர்கள் தவித்துக்கொண்டிருந்த நிலையில் இந்த இரக்கமற்ற கடத்தலும் சித்திரவதைகளும் சிங்களப்படைகளால் அரங்கேற்றப்பட்டிருக்கின்றது.
தர்மிலாவின் கணவனான பாலகுருபரனை ஏற்கனவே கடத்திவிட்டுத்தான் இவ்வாறான ஒரு நாடகத்தை சிங்களப்படைகள் நடத்துகின்றதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தர்மிலாவின் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளார்கள்.
ஜெனீவா தீர்மானத்திலிருந்து இலகுவில் தம்மை காப்பாற்றிக்கொள்வதற்கான முயற்சியின் ஒரு அங்கமாகவே இவர்கள் மேல்விடுதலைப்புலிகள் என்று பொய்யான குற்றச்சாட்டை சுமத்த சிங்களப்படைகள் முயற்சி செய்கிறது என்பது அங்குள்ள அனைத்து மக்களுக்கும் தமிழ்த்தலைவர்களுக்கும் வெளிப்படையாக தெரிந்த ஒரு விடயமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் திருகோணமலையில் உள்ள தர்மிலாவின் பெற்றோரின் வீட்டிலும் யாழப்பாணம் ஏழாலையில் உள்ள அவர்களது வீட்டிலும் சிங்கள படைகளும் ஒட்டுக்குழுக்களும் கண்காணிப்பு கமரா பொருத்தி வைத்துள்ளது. .ஜனநாயக செயற்பாடுகளுக்கான முன்னெடுப்புக்களை தடுக்கும் நோக்கில் சிங்களப்படைகள் தமக்கு பக்கபலமாக ஒட்டுக்குழுக்களையும் பயன்படுத்தி தமிழ்மக்களின் வீடுகளுக்குள் சென்று தேடுதல் நடத்துவதும் தாக்குதல் நடத்துவதும் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுவதும் தமிழர்பிரதேசங்களில் தற்போது தொடரப்படுகிறது.
இதேவேளை ஒட்டுக்குழுக்களை பயன்படுத்தி தமிழ்மக்களின் வீடுகளுக்குள் ஆயுதங்களை வைத்துவிட்டு பின்னர் தேடுதல்என்ற பெயரில் வீடுகளுக்குள் புகுந்து ஆயுதங்களை விடுதலைப்புலிகள் வைத்துள்ளார்கள் என்றும் விடுதலைப்புலிகளின் நடமாட்டம் இருப்பதாக தேடுதல் செய்வது போல் ஆயுதங்களை எடுத்து அவர்களை கைது செய்வது தொடர்கின்றது. எனவே அனைத்து தமிழ்மக்களும் தற்போது கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாகி இன்று எங்கே இருக்கின்றார் என்று தெரியாமல் மறைக்கப்பட்ட 7மாத கருவை சுமந்து சிங்களப்படைகளின் கைகளில் சிக்கித்தவிக்கும் பாலகுருபரன் தர்மிலாவை மீட்க புலம்பெயர் அமைப்புக்கள் மனிதஉரிமை அமைப்புக்கள் முன்வரவேண்டும்.
அனைத்து தமிழர்களும் அணிதிரண்டு இந்த இளம் தாயையும் 7 மாத கருவையும் காப்பாற்ற முன்வரவேண்டும். ; உலகநாடுகளுக்கும் மனிதஉரிமையமைப்புகளுக்கும் நாம் அழுத்தங்கொடுத்து இவர்களை அந்த கொடிய சிங்களப்படைகளிடமிருந்து மீட்டெடுப்போம்.
எம் ஒவ்வொருவரின் விரைவான செயற்பாடே அந்த தாயையும் கருவிலிருக்கும் குழந்தையiயும் காப்பாற்ற வழிவகுக்கும் என்பதால் நாம் அனைவரும் ஒன்றுதிரள்வோம். அந்த தமிழ்தாயையும் குழந்தையையும் காப்பாற்ற ஒன்றுபட்டு எழுந்திடுவோம்.
http://www.jvpnews.com/srilanka/62755.html

Geen opmerkingen:

Een reactie posten