தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 22 maart 2014

மத்திய அரசின் கரங்களில் தமிழர்களின் ரத்தக் கறை! யஷ்வந்த் சின்ஹா உடைத்த ரகசியங்கள் [

[ விகடன் ]
''இந்தியாவின் கரங்களில் தமிழர்களின் ரத்தக்கறை'' - இப்படிப் பேசியது இந்தியாவின் முன்னாள் வெளிவிவகாரத் துறை அமைச்சர்!
சென்னை எழும்பூரில் ம.தி.மு.க. சார்பில் நடைபெற்ற மனித உரிமை தினக் கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசினார் யஷ்வந்த் சின்ஹா. பி.ஜே.பி. அரசில் வெளிவிவகாரத் துறை அமைச்சராக இருந்தவர் என்பதால், அவர் பேச்சுக்கள் அனைத்தும் வரலாற்றில் பதிந்துவிட்ட ஆவணங்கள். இலங்கைக்கு எதிராகத் தொடர்ந்து போராடிவருபவர்களுக்கு முக்கிய ஆதாரம் அந்தப் பேச்சு.

நம்முடைய அரசியல் சாசனத்தில் மனித உரிமை மிக முக்கியமான அம்சமாகச் சேர்க்கப்பட்டு உள்ளது. ஆனால், யதார்த்தத்தில் நம்முடைய தேசம் மனித உரிமைக்காக செய்தது என்ன? அதைத் தெரிந்துகொள்ள நாம் இரண்டு விஷயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும்.
நம்முடைய அண்டை நாடான திபெத்தை சீனா ஆக்கிரமித்தது. இன்று வரை அந்த ஆக்கிரமிப்பு தொடர்கிறது. திபெத் மக்கள் துன்புறுத்தப்பட்டார்கள். இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். இன்றும் அந்த மக்களின் விடுதலை தீபம், சீனா என்ற அசுர சூறைக்காற்றால் அணைக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்தியா அதை இன்னும் வேடிக்கைதான் பார்த்துக்கொண்டு இருக்கிறது.
இரண்டாவது, நம்முடைய சகோதரர்கள் வாழும் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள். சனல் 4 வெளியிட்ட ஆவணப் படங்களை நானும் பார்த்தேன். ஒருசில நிமிடங்களுக்கு மேல் என்னால் அதைப் பார்க்க முடியவில்லை. மனிதனாகப் பிறந்த யாராலும் அதைப் பார்க்க முடியாது.
இலங்கையின் அத்துமீறலைத் தடுக்க அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பேசினேன். அதற்குப் பதில் சொன்ன பிரதமர், சீனாவைக் காரணம் காட்டி இலங்கையின் மீது பொருளாதாரத் தடை விதிக்க முடியாது என்றார்.
இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரிக்க வேண்டும் என்று ஜெனிவாவில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன் நம்முடைய பிரதமர் மன்மோகனும் ராஜபக்ஷேவும் சந்தித்தனர். அப்போது நம்முடைய பிரதமர், தமிழர் பகுதிகளில் உள்ள ராணுவத்தை இலங்கை அரசாங்கம் உடனடியாக விலக்க வேண்டும் என்றார். அதற்கு 'உடனடியாக முடியாது என்றார் ராஜபக்ஷே. அதைக் கேட்டுவிட்டு நம்முடைய பிரதமரும் திரும்பிவிட்டார். ஏனென்றால் அவர் செயல்படும் பிரதமராக இல்லை. அவர் அந்த அவமானத்தை ஏற்றுக்கொண்டு திரும்பியதற்கும் காரணம் இருக்கிறது. அந்த இனப்படுகொலையை நடத்தியதில் இந்தியாவும் பங்காளிதானே? அனைத்தையும் இவர்கள்தானே திட்டம் தீட்டி நடத்தினார்கள்.
அதன் காரணமாகத்தான் ராஜபக்ஷேவும் நம்முடைய பிரதமரும் அடிக்கடி கைகுலுக்கிக் கொள்கிறார்கள். அந்த இரண்டு கரங்களிலும் தமிழர்களின் ரத்தக் கறை படிந்திருக்கிறது. அதிலும் ராஜபக்ஷேவின் கரத்தைவிட, நமது பிரதமரின் கரங்களில் தமிழனின் ரத்தக் கறை அதிகமாகப் படிந்துள்ளது. நம்முடைய பிரதமரும் இன அழிப்புக் குற்றவாளி.
நம்முடைய தமிழர்களின் இறந்த உடலைச் சிதைத்த மாபாவத்தை செய்த காங்கிரஸுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் நீங்கள் வாக்களித்தால், நம் தமிழனின் உடலைச் சிதைத்த மாபாவத்தில் நீங்களும் பங்கெடுத்தவர்கள் ஆவீர்கள் என்று எச்சரிக்கிறேன்'' என்றார்.
இவரது பேச்சு காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது!
http://www.tamilwin.com/show-RUmsyDRWfCSbm.html

Geen opmerkingen:

Een reactie posten