ஐ.நா மனிதஉரிமைப் பேரவையில் அமெரிக்கா சமர்ப்பித்துள்ள இரண்டாவது பிரேரணையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ள பல்வேறு யோசனைகள் உள்ளீர்க்கப்பட்டுள்ளதுடன், சில சொற்பதங்கள் வலிமையாக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.சுமந்திரன் தெரிவித்தார். “வெள்ளிக்கிழமை இரவு அமெரிக்கா திருத்தப்பட்ட தனது இரண்டாவது பிரேரணையினை சமர்ப்பித்திருந்தது. இந்தப் பிரேரணையில் நாம் வலியுறுத்தியமைக்கமைய பல விடயங்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டிருந்தன. சர்வதேச விசாரணையை அமெரிக்கா தட்டிக் கழிக்கக் கூடாது என்று தெரிவித்திருந்தோம்.
அத்துடன், இலங்கை அரசை ஊக்குவிக்க வேண்டும் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்த சொற்பதங்கள் தற்பொழுது மாற்றப்பட்டு வலியுறுத்தப்பட வேண்டும் எனத் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.
மேலும், அமெரிக்காவின் பிரேரணை வலுவடைவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. இதில் திருத்தங்கள் கொண்டு வரப்படலாம். எமது செயற்பாட்டின் பிரதிபலிப்பாகவே இதனைப் பார்க்க வேண்டும். பிரேரணை ஆக்கபூர்வமான வகையில் அமையும் என்று நாம் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளோம் என்றும் அவர் கூறினார்.
http://www.jvpnews.com/srilanka/62758.html
Geen opmerkingen:
Een reactie posten