தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 15 maart 2014

சனல் 4 ஊடகவியலாளர்களுக்கும் வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் வாக்குவாதம் !

சனல் 4  ஊடகவியலாளர்களுக்கும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
நேற்று லண்டனில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் அமைச்சர்கள் செயற்குழுக் கூட்டத்தின் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, இரு தரப்பிற்கும் இடையில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.
அண்மையில் சனல் 4  ஊடகத்தினால் வெளியிடப்பட்ட காணொளி உண்மையானது என ஊடக நிறுவனத்தின் கெலும் மக்ரே மற்றும் ஜொனாதன் மில்லர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
மெய்யான தகவல்களின் அடிப்படையில் காணொளி வெளியிடப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.
எனினும், இந்த காணொளியானது போலியானது எனவும் ஆதாரங்கள் அற்றது எனவும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் அரசியல் காரணிகளுக்காக செனல்4 ஊடகம் இவ்வாறான காணொளிகளை மிக முக்கியமான காலங்களில் வெளியிட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை விவகாரங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்த போதிலும் இதுவரையில் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என மக்ரே தெரிவித்துள்ளார்.
ஊடக நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட காணொளிகள், ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிபுணர்களினால் உண்மையானவை என உறுதிப்படுத்தப்பட்டவை என ஜொனாதன் மில்லர் குறிப்பிட்டுள்ளார்.
http://news.lankasri.com/show-RUmsyDSZLVfr1.html

Geen opmerkingen:

Een reactie posten