இந்தியாவின் தலையீட்டுக்கு வழிவகுத்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவின் வெளிநாட்டுக் கொள்கைகள் தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.
காலி - மாத்தறைக்கு இடையிலான புதிய அதிவேக நெடுஞ்சாலையை இன்று திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் பெயரையோ இந்தியாவையோ ஜனாதிபதி பெயரிட்டு சுட்டிக்காட்டவில்லை.
கடந்த கால அரசாங்கங்களின் வெளிநாட்டுக் கொள்கைகள் காரணமாக விடுதலைப் புலிகளுடன் போர் நடைபெற்ற காலத்தில் அரசாங்கத்தின் படைகள் முகாம்களுக்குள் முடக்கப்பட்டதுடன் வடக்கில் வெளிநாட்டு துருப்புகள் நிலை கொள்ள வழிவகுத்தது.
கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்து அரசாங்கங்களில் தளர்வான வெளிநாட்டுக் கொள்கை காரணமாக வெளிநாட்டவர்கள் இலங்கையின் வன்பரப்பில் ஊடுருவி வடக்கில் பருப்பை போடுவதற்கு வழிவகுத்தது.
போருக்கு பின்னர் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தியை முடக்க பல்வேறு வகையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சர்வதேச அழுத்தங்களும், தீர்மானங்களும் அப்படியான தலையீடுகளை செய்யவே மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த முயற்சிகளுக்கு எதிர்க்கட்சிகளும் பங்களிப்பு செய்து வருகின்றன எனவும் ஜனாதிபதி குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசாங்கத்தை மிரட்டும் நடவடிக்கை என அந்த நேரத்தில் அது கருதப்பட்டது.
1987 ஆம் ஆண்டு இந்தியா இலங்கையின் வான்பரப்பில் ஊடுருவி விமானம் மூலமாக யாழ்ப்பாணத்தில் உணவு பொருட்களை போட்டதை பற்றியே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
அதே வருடத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டதுடன் புலிகள் உட்பட போராளி குழுக்களிடம் இருந்து ஆயுதங்களை களைய வடக்கில் இந்திய அமைதிக்காக்கும் படையினர் நிலை நிறுத்தப்பட்டனர்.
http://news.lankasri.com/show-RUmsyDSZLVfs5.html
Geen opmerkingen:
Een reactie posten