தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 2 maart 2014

அரசியல்வாதிகளிடம் இருந்து பெண்களை மட்டுமல்ல, பல்லிகளைக்கூட காப்பாற்ற முடியாது!- விஜித ஹேரத்

அரசாங்கத்தின் ஆட்சி அதிகாரம் உள்ள சபைகளில் அங்கம் வகிக்கும் அரசியல்வாதிகளிடம் இருந்து பெண் பிள்ளைகளை மட்டுமல்ல, முதலை, பல்லிகளை கூட காப்பாற்ற முடியவில்லை என ஜே.வி.பியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
பியகமவில் கட்சியின் பிரதான தேர்தல் பிரசார அலுவலகத்தை திறந்து வைத்து பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் இன்றைய அரசாங்கம் சகலவற்றை அழித்து விட்டது. வல்லப்பட்டை பொருளாதாரமாக நாட்டை மாற்றி விட்டது.
அரசாங்கத்தின் அரசியல்வாதிகளிடம் இருந்து பெண் பிள்ளைகளை மட்டுமல்ல முதலை, பல்லிகளையும் காப்பற்ற முடியாதுள்ளது.
2005ம் ஆண்டு தடுக்கப்பட்ட கல்விச் சுற்று நிருபத்தை அமைச்சர் பந்துல குணவர்தன மீண்டும் கொண்டு வந்துள்ளார்.
வறிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்களிடம் பணத்தை சேரிக்க ஆரம்பித்துள்ளனர்.
50 ரூபா முதல் 600 ரூபா வரை மேலதிக கட்டணமாக பெற்றோரிடம் இருந்து அறவிடப்படுகிறது.
பாடசாலை அபிவிருத்தி என கூறி தனியான கட்டணம் அறவிடப்படுகிறது என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten