தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 16 maart 2014

வணக்க ஸ்தலங்கள் மீதான தாக்குதல் தொடர்பில் எத்தனை பேரை கைது செய்தீர்கள்?- அசாத் சாலி கேள்வி!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் பிரதி சொலிஸ்டர் ஜெனரல் நெரின் புள்ளே நேற்று முன்தினம் தெரிவித்த கருத்து தொடர்பில் சிவில் கண்காணிப்பு ஆணைக்குழு நேற்று கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கப்பட்டது.
வணக்க ஸ்தலங்கள் மீதான தாக்குதல் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளின் பிரகாரம் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி சொலிஸ்டர் ஜெனரல் நெரின் புள்ளே ஜெனிவாவில் தெரிவித்திருந்தார்.
இந்த கருத்து தொடர்பில் சிவில் கண்காணிப்பு ஆணைக்குழு உறுப்பினர் அசாத் சாலி இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
அசாத் சாலி வெளியிட்ட கருத்து
அவருக்கு நான் சவால் விடுகின்றேன். ஐக்கிய நாடுகள் சபையில் தெரிவித்த விடயமானது, அப்பட்டமான பொய்யாகும்.
வணக்க ஸ்தலங்கள் மீதான தாக்குதல் தொடர்பில் யாரையும் இதுவரையில் பொலிஸார் கைது செய்யவில்லை. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் இல்லை.
போலியான B அறிக்கையை சமர்ப்பித்து உடனே பிணை வழங்கும் வகையில் செயற்பட்டனர்.
ஆகவே பிரதி சொலிஸ்டர் ஜெனரலுக்கு சவால் விடுகின்றேன்.
கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டன.
எத்தனை பேரை கைது செய்தீர்கள்?
எத்தனை பேரை 14 நாட்கள் சிறையில் வைத்தீர்கள்?
இதற்கு முடிந்தால் பதிலளிக்குமாறு பிரதி சொலிஸ்டர் ஜெனரலுக்கு சவால் விடுகின்றேன்

Geen opmerkingen:

Een reactie posten