கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் ஆண்களின் பாதுகாப்பின்றி தனிமையில் வசித்த தாயும் மகளும் போலியான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டதை வன்மையாக கண்டிப்பதாக பிரஜைகள் முன்னணி அறிவித்துள்ளது.
இந்த சம்பவத்தை கண்டிக்கும் வகையில் பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜே.ஸ்ரீரங்கா விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழ் மக்கள் அச்சுறுத்தப்படுவதை உடன் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
யுத்தத்தினால் பல்வேறுபட்ட இழப்புக்களைச் சந்தித்து வாழ்க்கையில் போராடிக் கொண்டிருக்கும் தமிழ் மக்கள் மீது அரசாங்கம் பல்வேறு அடக்குமுறைகளை கட்டவிழ்த்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்த சூழ்நிலையிலும் அதற்கு முன்னரும் பின்னரும் வடகிழக்கில் காணாமல் போனோர் தொடர்பில் எந்தவித தகவல்களையும் அறிந்து கொள்ள முடியாது மக்கள் தவித்துக் கொண்டிருப்பதாகவும் பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஜே.ஸ்ரீரங்கா சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் காணாமற்போயுள்ள தமது உறவுகளை தேடி ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை நாட்டில் மேலோங்கிவரும் ஜனநாயக மீறல்களை எடுத்துக்காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten