அமெரிக்காவில் வாழும் சிங்களவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக நியூயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்திற்கு எதிரில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
நாடு சீனர்களுக்கு லஞ்சம் ராஜபக்சவினருக்கு,
இலங்கையின் மனித உரிமைகளின் அழிவை நிறுத்து,
பயங்கரவாத தடைச் சட்டம் மூர்க்க சட்டம்,
இலங்கையில் பேச்சு சுதந்திரமில்லை,
கோத்தபாய உனக்கு வெட்கமில்லையா,
அரசியல் கைதிகளை விடுதலை செய்,
பொன்சேகாவுக்கு சுதந்திரமில்லை
போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட தட்டிகளை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.
ராஜபக்ச அரசாங்கத்திடம் இருந்து கோடிக்கணக்கில் பணத்தை பெற்றுக்கொண்டு அரசாங்கத்திற்கு ஆதரவான வெளிநாடுகளில் கூலிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தும் சந்தர்ப்பவாதிகளுக்கு உண்மையான தேசப்பற்றுள்ள மக்கள் நடத்திய இந்த ஆர்ப்பாட்டம் சிறந்த பாடமாக இருக்கும் என சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில் வசிக்கும் சிங்கள சந்தர்ப்பவாதிகளை கூலிக்கு ஆர்ப்பாட்டம் நடத்த ஜெனிவாவுக்கு அழைத்துச் செல்லும் அங்குள்ள தரகர்களுக்கு 28 கோடி ரூபாவை அரசாங்கம் வழங்கியுள்ளது.
ஐரோப்பாவில் அரசாங்கத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களை ஏற்படு செய்யும் நபர்களுக்கு தலா 50 ஆயிரம் யூரோக்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் அதில் பெருந்தொகைப் பணத்தை சுருட்டியுள்ளனர்.
ராஜபக்சவினர் நாட்டு மக்களின் பணத்தை செலவிட்டு, ரத்துபஸ்வலயில் பிள்ளைகளை கொலை செய்தமை உள்ளிட்ட தமது கொலைகளை மறைக்க கூலிக்கு ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்தாலும் உண்மையான தேசப்பற்றுள்ள புலம்பெயர் இலங்கையர்கள் வெளிநாடுகளில் வசிப்பதாக அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை ஜேர்மனியில் இப்படியான ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த அங்குள்ள சிங்கள வர்த்தகர் ஒருவருக்கு 50 ஆயிரம் யூரோக்கள் தனியார் பணப் பரிமாற்று நிறுவனத்தின் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டிருந்ததுடன் அவர் அதனை திருப்பி அனுப்பியுள்ளதாக அந்த இணையத்தளம் மேலும் தெரிவித்துள்ளது.
http://news.lankasri.com/show-RUmsyDSbLVesy.html
Geen opmerkingen:
Een reactie posten