தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 17 maart 2014

மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்களின் கைதுக்கு த.தே.கூட்டமைப்பு கண்டனம்!

யாழில் மாணவர்களை இலக்கு வைத்து ஆபாச இறுவெட்டுக்கள் விற்பனை: இருவர் கைது
[ திங்கட்கிழமை, 17 மார்ச் 2014, 12:25.42 PM GMT ]
யாழ். நகரை அண்மித்த பகுதிகளில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து ஆபாச இறுவெட்டுக்களை விற்பனை செய்த இரண்டு விற்பனை நிலையங்களை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
இன்று மதியம் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போது, குறித்த வர்த்தக நிலையங்களிலிருந்து இருபதுக்கும் மேற்பட்ட இருவெட்டுக்களை கைப்பற்றிய பொலிஸார், அங்கிருந்த இரண்டு பேரையும் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இரண்டு பிரசித்தி பெற்ற தனியார் கல்வி நிறுவனங்களுக்கு முன்னார் ஆபாச இறுவெட்டுக்கள் விற்பனை செய்யும் இரண்டு கடைகள் இயங்கி வந்ததுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த இரண்டு கடைகள் தொடர்பாகவும் யாழ். பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து, மாவட்ட பொலிஸ்மா அதிபரின் விசேட பொலிஸ் பிரிவினர் இன்று மதியம் திடீர் சுற்றுவளைப்பில் ஈடுபட்டனர்.
இதன்போதே அங்கிருந்த இருபதுக்கும் மேற்பட்ட ஆபாச சிடிக்களை கைப்பற்றிய பொலிஸார், இந்த விற்பனை நிலையத்திலிருந்த இரண்டு பேரையும் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
http://news.lankasri.com/show-RUmsyDSbLVesz.html

மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்களின் கைதுக்கு த.தே.கூட்டமைப்பு கண்டனம்
[ திங்கட்கிழமை, 17 மார்ச் 2014, 12:10.03 PM GMT ]
மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்கள் இருவர் பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று ஜனாதிபதியைக் கோருவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. 
இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் க.பிரேமச்சந்திரன் விடுத்துள்ள அறிக்கையில்,
நேற்றைய தினம் கொழும்பு மனிதவுரிமை செயற்பாட்டாளரான ருக்கி பெர்ணான்டோ (Ruki Fernando) என்பவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மனிதவுரிமைச் செயற்பாட்டாளர் அருட்தந்தை பிரவீன் என்பரும் பயங்கரவாத தடைப்பிரிவு என்று சொல்லப்படுகின்ற பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக அறிகின்றோம்.
இதற்கு முன்பாக கடந்த 13ஆம் திகதி கிளிநொச்சி தர்மபுரத்தில் காணாமல் போன தனது மகனைத் தேடியலையும் திருமதி பாலேந்திரா ஜெயக்குமாரி என்பவரும் அவரது மகள் விபூஷிகா என்பவரும் இதே பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, ஜெயக்குமாரியை பூசா முகாமிற்கும் அவரது மகளை கிளிநொச்சியிலுள்ள சிறுவர் காப்பகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்விருவரினதும் கைதுகள் குறித்த உண்மை நிலைகளை ஆராயவே மேற்படி இரு மனிதவுரிமை செயற்பாட்டாளர்களும் கிளிநொச்சி சென்றதாகப் பேசப்படுகின்றது. இவ்வாறான சூழலில்தான், இந்த இருவரும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல்வேறுபட்டவர்கள் யாழ்ப்பாணத்திலும், முல்லைத்தீவிலும், கிளிநொச்சியிலும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர். அதுமட்டுமன்றி, இனம் தெரியாத குழுக்கள் என்ற பெயரில் பலபேர் கடத்தப்பட்டு காணாமலும் போகின்றனர்.
கார்த்திகேசு நிரூபன் என்ற 30வயது விஞ்ஞான ஆசிரியர் வவுனியாவில் வைத்துக் காணாமல் போயிருந்தார். ஆனால், கடந்த வாரம் மாங்குளத்தில் இவரது எலும்புக்கூடும் அதனருகில் அவரது அடையாள அட்டையும் துவிச்சக்கர வண்டியின் சாவியும் கண்டெடுக்கப்பட்டது.
ஆகவே, இந்தக் கடத்தல்கள் என்பதும், காணாமல் போகச் செய்தல், சட்டத்திற்குப் புறம்பான கைதுகள் என்பதும் தொடர்ந்தவண்ணமே இருக்கின்றது. இதன் தொடர் நடவடிக்கையாக இப்பொழுது மனிதவுரிமை செயற்பாட்டாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இங்கு ஒருவிடயம் தெளிவாகப் புலப்படுகின்றது. காணாமல் போனோர்களுக்காக அவர்களது உறவுகள் போராடக்கூடாது. போராடினால் கடத்தப்படலாம் அல்லது கைது செய்யப்படலாம். அதே போன்று பாதிக்கப்பட்டவர்களுக்காக மனிதவுரிமை செயற்பாட்டாளர்களும் செயற்படக்கூடாது. அவர்களும் கைது செய்யப்படலாம் அல்லது காணாமல் போகச் செய்யப்படலாம் என்பதைத்தான் நேற்றைய நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன.
ருக்கி பெர்ணான்டோ அவர்களும் அருட்தந்தை பிரவீன் அவர்களும் பல காலமாக மனிதவுரிமைச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருபவர்கள். இவர்களைக் கைது செய்வதற்கோ அல்லது தடுப்புக்காவலில் வைத்து விசாரிப்பதற்கோ எதுவித முகாந்தரங்களும் இல்லை. ஆகவே இவர்களை இந்த அரசாங்கம் உடனடியாக விடுவிக்க வேண்டும்.
காட்டாட்சி செய்யக்கூடிய பயங்கரவாதத் தடைச்சட்டம் போன்ற சட்டங்களை முடிவிற்குக் கொண்டுவருவதற்கு இனம், மொழி, மதம் கடந்து மனிதவுரிமைகள் அடிப்படைச் சட்டங்கள் ஜனநாயக விழுமியங்கள் என்பவற்றில் நம்பிக்கை கொண்டோர் இவற்றிற்காகப் போராட முன்வர வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுக்கின்றது.
மேலும், கைது செய்யப்பட்டோ அல்லது தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று நாங்கள் ஜனாதிபதியைக் கோருகின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
http://news.lankasri.com/show-RUmsyDSbLVer7.html

Geen opmerkingen:

Een reactie posten