தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 21 maart 2014

ஐ.நாவில் காட்சிப்படுத்தப்பட்ட போர்க்குற்ற காணொளி: அதிர்ச்சியில் உலக நாடுகள்/எத்தனை தடவைதான் அதிர்வதுடன் வாளாதிருப்பாரோ!!



உலகநாடுகள் இன்னும் எத்தனை தடவைதான் அதிர்வதுடன் வாளாதிருப்பாரோ!!

சொந்த இன அழிவில் புகழ் சேர்க்க இன்னும் எத்தனை படம் போடுவாரோ!
எவ்வளவுகாலம் எமாற்றுவாரோ!!

ஜெனிவாவில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையின் ஊடக மாநாடு
[ வெள்ளிக்கிழமை, 21 மார்ச் 2014, 11:43.41 AM GMT ]
இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்திலுள்ள பிரச்சினைகள் அல்லது தீர்வுகள் தொடர்பாக ஜெனிவாவில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையின் ஊடக மாநாடு
ஐ.நாவின் தீர்வு விடயத்தில் தமிழர்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் செயற்பாடு பிரதானம் எஸ்.கஜேந்திரன்
வெளியிடப்பட்ட திட்ட வரைபு தமிழ் மக்களின் விடயத்தில் திருப்தி காணவில்லை இதில் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் கருத்து பிரதானமானது என செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.
ஐ.நா சபையில் வரவுள்ள தீர்மானத்தை வலிமையுள்ளதாக்குவதில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளின் பங்களிப்பு மிக மிக பிரதானம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் லங்காசிறி வானொலியின் ஜெனிவாக் கலையகத்தில் தெரிவித்தார்.
மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தால் விசாரணைக்கான ஆரம்ப கட்டத்தை தயார்படுத்த முடியும்: சட்டத்தரணி குருபரன்
அமெரிக்காவின் திட்டவரைபு முழுமையான சர்வதேச விசாரணையை நோக்கியதென்று கூற முடியாது என சட்டத்தரணியும் விரிவுரையாளருமான குமாரவடிவேல் குருபரன் தெரிவித்துள்ளார்.
மேலும், ஐ.நா மனித உரிமைகள் பேரவை எந்தத் தரப்பினரையும் நீதிமன்ற விசாரணைக்கு கொண்டு செல்ல தகைமையற்றது. குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் தகைமை சர்வதேவ நிதுிமன்றத்திற்கு மட்டுமே உள்ளது. அதனை ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடமிருந்து எதிர்பார்க்க முடியாது என ஜெனிவாவில் லங்காசிறிக்கு அளித்த நேர்காணலில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
http://www.lankawin.com/show-RUmsyDRVLWmr2.html

ஐ.நாவில் காட்சிப்படுத்தப்பட்ட போர்க்குற்ற காணொளி: அதிர்ச்சியில் உலக நாடுகள்
[ வெள்ளிக்கிழமை, 21 மார்ச் 2014, 09:17.53 AM GMT ]
கடந்த வியாழன் இலங்கைப் பெண்களின் பாலியல் மற்றும் சித்திரவதைகள் தொடர்பில் சர்வதேச மன்னிப்பச் சபை முக்கிய கூட்டம் ஒன்றை நடாத்தியது.
அதில் மனித உரிமை ஆர்வலர் ஜஸ்மின் சூக்கா பல நாட்டு பிரதிநிதிகள் பன் நாட்டு பிரதிநிதிகள் மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் சனல்-4 ஊடகவியலாளர் கலும் மக்ரேயின் இலங்கைப் பெண்களின் அவலம் குறித்தத காணொளி பலரது கவனத்தையும் ஈர்த்தது.
இலங்கையில் நடந்த கொடுமைகளை பார்த்த பல நாட்டு பிரதிநிதிகள் கலங்கி நின்றதை அவதானிக்கக் கூடியதாய் இருந்ததுடன், கலும் மக்ரேயுடன் ஆர்வமாய் இலங்கை விடயம் குறித்து கலந்துரையாடினர்.
http://www.lankawin.com/show-RUmsyDRVLWmry.html

Geen opmerkingen:

Een reactie posten