தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 21 maart 2014

சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம்: முடிவெடுத்து விட்டது இந்தியா -


ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுவே ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கடைசியான வெளிவிவகாரக் கொள்கை முடிவாக இருக்கலாம்.
ஜெனிவாவில் இந்த வாக்கெடுப்பு வரும் 28ம் நாள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க புதுடெல்லி முடிவெடுப்பது இது மூன்றாவது தடவையாகும்.
அரசியல் கருத்துகளை மனதில் கொண்டு இராஜதந்திர ரீதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெனிவாவில் விநியோகிக்கப்பட்ட தீர்மான வரைவின் பெரும்பாலான மற்றும் கணிசமான பகுதிகளுடன் இந்தியா உடன்பட்டுள்ளது.
வரைவின் 8வது பந்தியில் “சுதந்திரமான அனைத்துலக விசாரணை மற்றும் “மனிதஉரிமைகள் மற்றும் அதுதொடர்பான மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரித்தல்” ஆகிய பதங்களை மென்மைப்படுத்தும் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்தியாவினது பல கவலைகளை அமெரிக்கா, பிரித்தானியா, மொன்ரனிக்ரோ, மசிடோனியா, மொறிசியஸ் ஆகிய நாடுகள் இந்த தீர்மான வரைவில் முதன்மைப்படுத்தியுள்ளது, மிகவும் சாதகமான அமைந்துள்ளதாக புதுடெல்லி கருதுவதாகவும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.
குறிப்பாக, 13வது அரசியலமைப்புத் திருத்தம் தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது புதுடெல்லிக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
தீர்மான வரைவின் 6வது பந்தியில் “சிறிலங்கா அரசியலமைப்பின் 13வது திருத்தத்துக்கு அமைவாக, வடக்கு மாகாணசபைக்கும், அதன் முதலமைச்சருக்குமான வளங்களையும், ஆட்சி செய்வதற்குத் தேவையான அதிகாரங்களையும், வழங்க சிறிலங்கா அரசாங்கத்தை ஊக்குவிக்கிறது.” என்று கூறப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்த பின்னர், மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் 13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும் படி கடந்த ஐந்து ஆண்டுகளாக ராஜபக்ச அரசாங்கத்தை, இந்தியா கேட்டு வருகிறது.
உண்மையில், ஒருமுறை சிறிலங்கா, 13வது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் செல்ல விரும்புவதாகவும் கூறியது.
அதனைத் தொடர்ந்து, 13வது திருத்தத்துக்கு அப்பாற் செல்வது குறித்து புதுடெல்லி வலியுறுத்தி வருகிறது.
இந்தியாவினது மற்றொரு கவலையான, சிறிலங்காவில் உள்ள சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் குறித்தும் தீர்மான வரைவு பேசுகிறது.
“கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மீதான தனிநபர்களினதும், குழுக்களினதும் எல்லாத் தாக்குதல்கள் குறித்தும் விசாரித்து, எதிர்காலத்தில் இத்தகைய தாக்குதல்கள் நடக்காமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து, வழிபாட்டுத் தலங்கள், ஊடகவியலாளர்கள், மனிதஉரிமை ஆர்வலர்கள், சிறுபான்மை மதக்குழுவினர், சிவில் சமூக உறுப்பினர்கள் மீதான தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.” என்று தீர்மான வரைவில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
- See more at: http://www.canadamirror.com/canada/23392.html#sthash.2bqaIzEB.dpuf

Geen opmerkingen:

Een reactie posten