கிளிநொச்சியில் 13 வயது தமிழ்ச் சிறுமியொருவரையும், அவரது தாயையும் இலங்கை பொலிசார் கைதுசெய்துள்ளார்கள். அவர்களை 4ம் மாடிக்கு கொண்டுசென்றுள்ளார்கள். இதனைக் கண்டித்து பிரித்தானிய தமிழர்கள் பாரிய ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். சிறுமியையும் தாயையும் விடுதலைசெய்யவேண்டும் என அவர்கள் நடத்திய போராட்டம், சற்று முன்னர் சாலை மறியல் போராட்டமாக மாறியுள்ளது. பிரித்தானிய பிரதமரின் இருப்பிடம் முன்பாக இப்போராட்டம் சூடு பிடித்துள்ளது. இதனால் கலகம் அடக்கும் பொலிசார் மற்றும், ஆயுதம் ஏந்திய பொலிசார் பாதுகாப்புக்காக அங்கே குவிக்கப்பட்டுள்ளார்கள். மேலதிக செய்திகள் விரைவில் வெளியாகும்.


http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6534
Geen opmerkingen:
Een reactie posten