அரச புலனாய்வு சேவையின் தகவல்கள் எவ்வாறு வெளிநாடுகளில் இருந்து பதிவேற்றப்படும் இணையத்தளங்களுக்கு கிடைத்து வருகிறது என்பது அறிய அரச புலனாய்வு சேவைக்குள் இரகசியமான விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறன.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ச டி சில்வா உண்மையற்ற தகவல்களை பரப்பி மக்களை தூண்டி வருவது சம்பந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அரச புலனாய்வு சேவையின் தலைவர் சந்திரா நிமால் வாகிஸ்டவுக்கு அனுப்பிய கடிதம் தொடர்பான செய்தி 24 மணிநேரத்திற்குள் இணையத்தளங்களில் வெளியாகியது.
இதனையடுத்தே இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரச புலனாய்வு சேவையின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், தேசத்து மகுடம் கண்காட்சி பூமியில் அமைக்கப்பட்டிருந்த ஊடத்துறை அமைச்சின் அலுவலத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன, நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வாவை கைது செய்யும் எந்த முயற்சிகளும் எடுக்கப்படவில்லை என தெரிவித்திருந்தார்.
ஹர்ச டி சில்வாவுக்கு எதிராக அரச புலனாய்வு சேவையோ வேறு பிரிவுகளே விசாரணைகளை நடத்தவில்லை எனவும் ஹர்ச டி சில்வா வெளியிட்டுள்ள உண்மைக்கு புறம்பான தகவல் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கும் முனைப்புகளில் அரச புலனாய்வு சேவைக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியிருந்தார்.
அரச புலனாய்வு சேவையின் விசாரணைகளை அடிப்படையாக கொண்டு தன்னை கைது செய்வதற்கான கடிதம் ஒன்றை பாதுகாப்புச் செயலாளர் வெளியிட்டுள்ளதாக ஹர்ச டி சில்வா கூறியிருந்தமை தொடர்பில் பதிலளித்திருந்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், அவரை கைது செய்யும் எந்த தேவையும் இல்லை என குறிப்பிட்டிருந்தார்.
எவ்வாறாயினும், ஹர்ச டி சில்வாவின் குரலை அடக்கும் பணிகளை பாதுகாப்புச் செயலாளர் அரச புலனாய்வு சேவையிடம் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
Geen opmerkingen:
Een reactie posten