சிறிலங்காவில் பிரித்தானியர் கைப்பற்றியது தொடக்கம் சுதந்திரம் இழந்து தற்காலத்தில் சுற்றமிழந்து, சொந்த நிலமிழந்து இறுதியில் உயருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் அல்லல்படும் தமிழ் இனத்திற்கு மனித உரிமைக் கவுன்சில் எடுக்கும் நடவடிக்கைகள் நியாயமான தீர்வினை வழங்குமா என்பது உலகெங்கும் பரந்து வாழ்கின்ற தமிழ் இனத்திற்கு பெரியதொரு எதிர்பார்ப்பாகவே இருந்து வருகின்றது. தற்போது ஜெனிவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற மனித உரிமைக் கவுன்சில் மூலமாக ஏதாவது ஒரு வெளிச்சம் எமக்குக் கிடைக்குமா என்ற ஏக்கத்துடன் பல்லாயிரக்கணக்கான தமிழ் நெஞ்சங்கள் தவிக்கின்றன.
இதே நிலையில் சிறிலங்காவிலுள்ள மனித உரிமைகள் சம்பந்தமான குழுக்கள் சிறிலங்காவில் போர்க்குற்றங்கள் சம்பந்தமாகவும், மற்றைய உரிமைகள் சம்பந்தமான குற்றங்களையும் குறிப்பாக போர்க்காலங்களில் நடந்தவைகளைப் பற்றி சர்வதேச விசாரணை நடாத்துமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பினை செவ்வாய்க்கிழமை கேட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவித்திருக்கின்றன. குறிப்பாக 24 உள்ளுர் குழுக்கள் கையொப்பமிட்ட மனுவொன்றை ஐக்கிய நாடுகள் மானித உரிமைகள் கவுன்சிலிடம் சம்பர்ப்;பித்திருப்பதாத் தெரிகிறது. அந்த மனுவில் தாம் சிறிலங்கா அரசானது நேர்மையான முறையில் விசாரணையை நடாத்தும் என்பதில் தமக்கு நம்பிக்கையில்லையெனத் தெரியவருகிறது என்பது குறிப்பிடப்பட்டுள்ளதென வுழசழவெழ ளுவயச தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பானது இதற்கு முன்பே இரு தடவைகள் சிறிலங்கா அரசினை தமது சொந்த விசாரணையை நடாத்துமாறு கேட்டிருந்தமை யாவரும் அறிந்தவிடையம்.
அதே நேரம் அமெரிக்காவானது சிறிலங்காவில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லையென்பதால் 3வது தீர்வுத் திட்டத்தையும் இந்தத் தடவை சமர்ப்பிக்கப்பபோவதாக கூறியிருந்தது. குறிப்பிட்ட அமைப்பின் தலைவரான நவாம்பிள்ளை தனது அறி;க்கையில் கவுன்சில் சர்வதேச விசாரணையைக் கோருகின்றது எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் சிறிலங்கா அரசானது மறுத்துவிட்டது.
குறிப்பிட்ட உள்நாட்டுப் போரில் இருதரப்பினர்களும் குற்றம் இளைத்திருந்தாலும் சிறிலங்காவின் படைகள்மேல் பாரிய குற்றச்சாட்டுக்கள் குவிந்துள்ளன. குறிப்பாக பொதுமக்கள் மேல் ஷெல் தாக்குதல், மருத்துவமனைகள் மேல் தாக்குதல், மருந்து, உணவுப் பொருட்களைப் போர் வலையத்திற்கு செல்லாது தடுத்தமை, போன்ற பாரிய குற்றங்களாகும்.
அண்மையில் சில காலத்திற்கு முன்பு சர்வதேசக் குழுக்கள் சிறிலங்கா சென்று வந்திருக்கின்றார்கள் அவர்கள் சமர்ப்பித்துள்ள அறிக்கைகளும் சிறிலங்கா அரசானது கணிசமானளவு குற்றங்கள் இழைத்துள்ளது என்பதை நிருபணமாக்ககின்றது.
பல நிபுணர்கள், நாடுகள் சிறிலங்காவை குற்றம் சாட்டுகின்றபோதிலும் சிறிலங்கா மறுத்துரைத்து எவ்வாறோ தப்பித்துக்கொண்டு வருகின்றது. பல தடவைகள் நவாம்பிள்ளையின் கோரிக்கையை நிராகரித்துள்ளத. அத்துடன் சிறிலங்காமேல் தேவையில்லாமல் தலையிடுகின்றார்கள் எனவும் சிறிலங்காத் தலைவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
பல நிபுணர்கள், நாடுகள் சிறிலங்காவை குற்றம் சாட்டுகின்றபோதிலும் சிறிலங்கா மறுத்துரைத்து எவ்வாறோ தப்பித்துக்கொண்டு வருகின்றது. பல தடவைகள் நவாம்பிள்ளையின் கோரிக்கையை நிராகரித்துள்ளத. அத்துடன் சிறிலங்காமேல் தேவையில்லாமல் தலையிடுகின்றார்கள் எனவும் சிறிலங்காத் தலைவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
இந்த நிலையானது தமிழர்களது எதிர்பார்ப்பினை எந்தளவிற்கு தீர்த்து வைக்க முடியும் என்பதைக் காலம்தான் நிர்ணயிக்கும் என நம்பவேண்டிய நிலைக்குத் தமிழ் இனம் தள்ளப்பட்டிருக்கின்றது.
- See more at: http://www.canadamirror.com/canada/22722.html#sthash.pWHzElcI.dpuf
Geen opmerkingen:
Een reactie posten