இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக சர்வதேச விசாரணை ஒன்று அவசியம் என அவுஸ்திரேலியாவின் நியூ சவூத் வேல்ஸ் மாநிலத்தின் செனட் உறுப்பினர் சாம் ஒஸ்டியார் தெரிவித்துள்ளார்.
ஜெனிவா மனித உரிமை பேரவையின் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா மனித உரிமை பேரவையில் கொண்டு வரப்படும் யோசனைக்கு அவுஸ்திரேலியா ஆதரவு வழங்க வேண்டும்.
போருக்கு பின்னர் சிறுபான்மை மதங்கள் மற்றும் ஊடகவியலாளர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இலங்கையில் பிறந்த 86 ஆயிரத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவில் வசிப்பதாக 2011 ஆம் ஆண்டு புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
எனது பிராந்தியாமான விக்டோரியாவின், எனது பிரதேசமான நியூ சவுதி வேல்ஸ் பகுதியில் பெருபான்மையான இலங்கையர்கள் வசித்து வருகின்றனர்.
அங்கு வாழும் இலங்கையர்களில் பலர் எனது அயல் வீட்டினர் மற்றும் எனது வகுப்பு தோழர்கள்.
இலங்கையின் இறுதிக்கட்ட போரில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா பொதுச் செயலாளரின் நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமை அமைப்புகள் உட்பட சர்வதேச அமைப்புகள் போர்க்குற்றங்களும், மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்களும் இடம்பெற்றுள்ளதாக கூறியுள்ளன.
விடுதலைப் புலிகளின் சிறுவர்களை படையில் சேர்ந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மீதான தாக்குதல்கள், சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகள், காணாமல் போன சம்பவங்களுடன் இலங்கை அரசாங்க படையினர் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்படுகிறது.
போருக்கு பின்னரும் அச்சுறுத்தல்கள், பயமுறுத்தல்கள், சிறுபான்மை இனத்தவர்கள் மீதான அடக்குமுறைகள் தொடர்கின்றன.
மனித உரிமை ஆர்வலர்கள், சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள் எதிரான அச்சுறுத்தல்கள் அடங்குமுறைகள் தொடர்கின்றன என சாம் ஒஸ்டியார் குறிப்பிட்டுள்ளார்.
http://news.lankasri.com/show-RUmsyDRULWnw4.html
Geen opmerkingen:
Een reactie posten