தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 2 maart 2014

கொழும்பில் சுப்பர் சிங்கர் இசைநிகழ்ச்சி ரத்தாகி சென்னை திரும்பிய திவாகர் உலகத் தமிழர்களிடம் மன்னிப்பு!

ஏற்பாட்டாளர்களின் வற்புறுத்தல்களால் இலங்கை சென்றோம், இலங்கைக்கு செல்வதற்கு எனக்கு விருப்பமே இல்லை. இலங்கை சென்றதற்காக உலகத் தமிழர்களிடம் முதலில் மன்னிப்புக் கேட்டுக்கொள்கின்றேன்.
நாம் தமிழர்கள்,  யாருக்கும் எதிரானவர்கள் அல்ல,  என்றும் தமிழர்களுக்கு அநீதி செய்ய நான் தயாரில்லை,  தமிழக இயக்குனர் கௌதமன் மற்றும் உணர்வாளர்களின் வேண்டுதலில் என் நிகழ்ச்சியை ரத்துச் செய்தேன் என சுப்பர் சிங்கர் இசை நிகழ்ச்சியில் முதல் இடம் பெற்ற திவாகர் தெரிவித்தார்.

நாம் தமிழர்களை என்றும் எதிர்த்ததில்லை நானும் தமிழருக்காகப் போராடுவேன் என இலங்கையில் ஏற்பாடாகியிருந்த சுப்பர் சிங்கர் இசைநிகழ்ச்சிக்காக கொழும்பு சென்று  தமிழ் உணர்வாளர்களின் தூண்டுதலினால் அந்நிகழ்ச்சி ரத்தாகி மீண்டும் சென்னை திரும்பிய சுப்பர் சிங்கர் இசை நிகழ்ச்சியில் முதல் இடம் பெற்ற திவாகர் லங்காசிறி வானொலியின் செவ்வியில் தெரிவித்தார்.


எதிர்ப்பை தொடர்ந்து இலங்கையில் நடத்த இசை நிகழ்ச்சியை தமிழகத்தில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ரத்து செய்துள்ளதால் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு உலகத் தமிழர்கள் நன்றி தெரிவித்தனர்.

இது தொடர்பாக மதிமுக தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 

கொடியவன் கோத்தபாய ராஜபக்ச கூட்டம் பின்னணியில் செய்திருக்கிற ஏற்பாட்டில் இலங்கையில் இசை நிகழ்ச்சி என்ற பெயரில் உலக நாடுகளை ஏமாற்றும் வேலைக்கு ஏற்பாடாகி இருந்தது. ஈழத்தில் நடைபெற்ற படுகொலைகளை மறைப்பதற்காக நரித் தந்திரத்தோடு இந்த இசைவிழாவை நடத்த ஏற்பாடாகி இருந்தது. 

ஒரு தனியார் தொலைக்காட்சி இசைக்குழுவினரும், இலங்கைக் கலைப்படைப்பினரும் இணைந்து இந்த இசைவிழாவை நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

மார்ச் 01ம் தேதி கொழும்பு மருதானை, புனித வளனார் கல்லூரியிலும், மார்ச் 02ம் தேதி பம்பலப்பட்டி கதிரேசன் மண்டபத்திலும் நடைபெற இருந்த இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழ்நாட்டிலுள்ள தனியார் தொலைக்காட்சியில் பாடல் இசைக்கும் கலைஞர்கள் நேற்றே இலங்கை தலைநகர் கொழும்பு சென்றனர். 

இந்த தகவலை அறிந்த வைகோ, ரோமாபுரி பற்றி எரிந்த போது நீரோ பிடில் வாசித்தது போல தனியார் தொலைக்காட்சி இசைக் கலைஞர்கள் அங்கு பாடப் போகிறார்களா? ஈழத் தமிழர்கள் எழுப்பிய மரண ஓலம் இன்னும் அங்கு காற்றில் கலந்து தான் இருக்கிறது. காயப்பட்டுப் போன தமிழர்கள் மனங்களில் நெருப்பைப் போடும் வேலையில் விஜய் தொலைக்காட்சி ஈடுபட வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்தார். 

இதையடுத்து இந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. 

கொழும்பில் இருந்து வெளிவருகின்ற பிரபல தமிழ் செய்தித்தாள்களில் இச்செய்தி வந்துள்ளது. இதையறிந்த உலகத் தமிழர்கள் தொலைபேசியில் வைகோவை அழைத்து தங்கள் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்கள்.

2ம் இணைப்பு

இலங்கை நிகழ்ச்சிக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை: விஜய் டி.வி. விளக்கம்

இலங்கையில் மார்ச் 1 மற்றும் 2-ம் தேதிகளில் விஜய் டி.வி. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை நடத்த உள்ளதாக குற்றம் சாட்டிய இயக்குனர் கவுதமன், அந்த நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். ஈழத்தமிழர்களை படுகொலை செய்த இலங்கையில் விஜய் டி.வி. இசை நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என்று வைகோவும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மார்ச் 1 மற்றும் 2-ம் தேதி இலங்கையில் நடக்கும் இசை நிகழ்ச்சிக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று விஜய் டி.வி. விளக்கம் அளித்துள்ளது.

இதற்கு முன்பு இலங்கையில் எந்த ஒரு நிகழ்ச்சியையும் நடத்தியதில்லை. தமிழர்களின் உணர்வுகளை விஜய் டி.வி. புரிந்து கொண்டிருக்கிறது. இலங்கையில் நிகழ்ச்சி நடத்துவதாக வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை, என்று விஜய் டி.வி. வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலும் லண்டனிலும் சூப்பர் சிங்கரை களம் இறக்கி மக்களை குழப்பும் கோத்தபாய கும்பல்! - கெளதமன் மற்றும் திருமுருகன், வைகோ



இலங்கையில் தமிழர்களுக்கு இன்றுவரையில் ஒரு தீர்வும் கிடைக்காமைக்காக தமிழர்கள் போராடிக்கொண்டிருக்கும் இந்நிலையில் இந்திய பிரபல ஊடகம் ஒன்றின் துணையுடன் கொழும்பில் நடைபெறவுள்ள சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை புறக்கணிக்க வேண்டுமென கெளதமன் மற்றும் திருமுருகன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

ஜெனிவாவை திசை திருப்ப இலங்கை மற்றும் லண்டனில் சூப்பர் சிங்கரை களம் இறக்கி மக்களை குழப்பும் நோக்கத்தோடு கோத்தபாயவின் கும்பல் நடவடிக்கை எடுத்துள்ளதாக, இயக்குனர் கௌதமன் மற்றும் மே 17 இயக்க தலைவர் திருமுருகன் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழர்களுக்கு எதிரான இசை நிகழ்ச்சிகளை புறக்கணித்து தமிழரின் பலத்தை சிங்களத்திற்கு காட்ட உடன் தயாராவோம் என இயக்குனர் கௌதமன் மற்றும் மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி ஆகியோர் அவசர அறிக்கை விடுத்துள்ளனர். 

இவ்வாறான எதிர்ப்புக்களைத் தொடர்ந்தும் இந்நிகழ்ச்சிக்காக சூப்பர் சிங்கர்கள் இலங்கை சென்றிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் இந்திய திரைப்பட இயக்குநர் வ.கெளதமன், மற்றும் மே 17 இயக்க அமைப்பின் தலைவர் திருமுருகன் ஆகியோரை லங்காசிறி வானொலி தொடர்புகொண்டு கேட்டபோது தெரிவித்த கருத்துக்களை செவிமெடுக்க.......
http://www.lankaroad.com/index.php?subaction=showfull&id=1393703727&archive=&start_from=&ucat=1&

Geen opmerkingen:

Een reactie posten