வவுனியா பயங்கரவாதத் தடுப்பு பிரிவில் விபூசிகாவும் தாயாரும்? தர்மபுர பகுதியில் 400ற்கு மேற்பட்ட படையினர்
வடக்கில் இடம்பெற்ற மனித உரிமைப் போராட்டங்களில் முன்னின்று செயற்பட்ட தாய் ஜெயக்குமாரியும் அவரது புதல்வி விபூசிகாவும் வவுனியா பயங்கரவாத தடுப்பு பிரிவில் இருப்பதாக வவுனியாவில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிறிதொரு தகவல் உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் தொடர்ந்த அழுத்தங்களால் விபூசிகா விடுவிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகின்ற போதிலும் அவர்களின் கையடக்கத் தொலைபேசி செயற்பாட்டில் இல்லததனால் அதனை உறுதிப்படுத்த முடியாதுள்ளது.
நேற்றைய தினம் இலங்கைப் படைப் புலனாய்வாரள்களால் அரங்கேற்றப்பட்டதாக கருதப்படும் துப்பாக்கிப் பிரயோக நாடகமும் அதனைத் தொடர்ந்து தப்பியோடியதாக காட்டப்படும் இளைஞரும் அவரைத் தேடுவதாக நடத்தப்படும் தேடுதல் நடவடிக்கைகளும், இவற்றோடு நீண்ட காலமாக இலக்கு வைக்கப்பட்ட மகனைத் தேடும் ஜெயக்குமாரி மற்றும் அண்ணனைத் தேடும் விபூசிகா ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக கூறி அவர்களை தூக்கியமையும் இப்போ பயங்கரவாத தடுப்பு பிரிவில் தடுத்து வைப்பு, விசாரணை, சுற்றிவளைப்பு எனத் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை தொடர்ந்து 400ற்கு மேற்பட்ட படையினரால் சுற்றி வளைக்கப்ட்டுள்ள தர்மபுரம் பகுதிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதி ராஜா மற்றும் சரவணபவன் உள்ளிட்ட குழு சென்று இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜெனிவா சவால்களை எதிர்கொள்வதற்காக அண்மையில் தேடப்படுவதாக கூறப்பட்ட அப்பாவி இளைஞரான டிப்பர் சாரதி கஜீபன் செல்வநாயகம், மற்றும் அவருடன் 20 புலிகள் தர்மபுரத்தில் தொழிற்படுவதாகவும் புலிகள் தம்மை மீள் அமைத்து வருவதாகவும் சர்வதேசத்திற்கு காட்டும் முயற்சியே தர்மபுரம் நாடகம் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.jvpnews.com/srilanka/62644.html
கோட்டபயவின் உத்தரவில் பேரிலே தாயும் மகளும் கைது!
கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியில் தாயும், மகளும், பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காணாமல் போனோர் தொடர்பான பல்வேறு ஆர்ப்பாட்டங்களில் ஜெயகுமாரி மற்றும் அவரது மகள் விபூசிகா ஆகியோர் பங்கு பற்றி இருந்துள்ளனர்.
இந்த நிலையில் அவர்களை கைது செய்யுமாறு பாதுகாப்பு செயலாளர் கோட்டாபயவே உத்தரவிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்த நிலையில் அவர்களை கைது செய்யுமாறு பாதுகாப்பு செயலாளர் கோட்டாபயவே உத்தரவிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இதேவேளை இந்த கைது சம்பவத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவ்வாறு கைது செய்யப்பட்டால் 24 மணித்தியாலத்துக்குள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும், எனினும் இன்னும் அவர்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை என்று கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவ்வாறு கைது செய்யப்பட்டால் 24 மணித்தியாலத்துக்குள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும், எனினும் இன்னும் அவர்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை என்று கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/62648.html
Geen opmerkingen:
Een reactie posten