தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 3 maart 2014

சிங்களப் பெண்மணியே கிளர்ந்தெழுகிறார் சிங்கள வெறியர்களின் ஆட்சியை எதிர்த்து!



இனப்பாகுபாடுகள் மற்றும் இன வெறிக்கு எதிரான சர்வதேச இயக்கத்தின் தலைவி, ராஜபக்சே சகோதரர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் சிங்களப் பெண். ராஜபக்சே அரசின் போர்க் குற் றங்களுக்காகவும், இனப்படுகொலை களுக்காகவும் சர்வதேச நீதிமன்றக் கூண் டில் அவரை நிறுத்தத் துடிக்கிற மனித உரிமை செயற்பாட்டாளர், கண்காணிப்பு, கொலை முயற்சி, மிரட்டல்களைக் கடந்து இனப் படுகொலைக்கு எதிராக உலக அரங்கில் முழக்கமிட்டு கவனம் ஈர்க்கும் வழக்கறிஞர். இலங்கைக்கு எதிரான அய்.நா.வின் மூன்றாவது தீர்மானத்துக்கு ஆதரவாக உலகைத் திரட்டிக் கொண்டி ருக்கும் பரபரப்பான சூழலுக்கு நடுவில் குங்குமம் இதழுக்காக பேசினார் நிமல்கா.
தேர்தல்களுக்குப் பிறகான இலங் கையில், தமிழர்களின் நிலை மாறி யிருக்கிறதா?
ஒன்றும் மாறவில்லை. தமிழர் பகுதி களில் ராணுவ ஆட்சிதான் நடக்கிறது. 5 பேருக்கு ஒரு ராணுவ புலனாய்வாளர் என்ற கணக்கில் படையினர் தமிழ் நிலங் களை ஆக்கிரமித்துள்ளார்கள். ஒரு குழந் தையின் பிறப்பைக் கொண்டாடவும், ஒரு மரணத்தின் துக்கத்தில் அழவும் கூட முடியாத அளவுக்கு மக்கள் முடக்கப் பட்டுள்ளார்கள். வீட்டுக்கு எவரேனும் வந்தால், விசாரணைக்கு உட்பட வேண்டி யுள்ளது. வாழ்வுரிமை கேட்டுப் போரா டும் தமிழர்கள் கடுமையாகத் தாக்கப்படு கிறார்கள். கோத்த பய ராஜபக்சே தலை மையில் இதற்காகவே ஒரு சிறப்புப்படை இயங்குவதாகச் சொல்லப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட சிறப்புப்படையினர் உலா வருவதாகச் சொல்கிறார்கள்.
தமிழர் பகுதிகள் அதிவேகத்தில் சிங் களமயமாகி வருகின்றன. இதற்கு மூன்று விதமான யுக்திகள் பயன்படுத்தப்படுகின் றன. முதல் யுக்தி, தமிழ்ப்பெயர் மாற்றம், வடக்கில் பழைமையான புத்த விகாரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதில் இடம்பெற்றிருந்த தமிழ்ப்பெயரை அழித்துவிட்டு சிங்களத்தில் எழுதியுள் ளார்கள். தமிழ்ப்பகுதிகளில் சிங்களர் களே ஆதிகுடிமக்கள் என்று வரலாற்றை மாற்றி எழுதுகிற முயற்சியும் நடக்கிறது. தமிழ் மக்களுக்கு அரசு வேலை தேவை யென்றால் சிங்களம் படிக்க வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இரண்டாவது யுக்தி, எல்லாப்பகுதிகளி லும் புத்தவிகாரங்கள், தூண்கள், வழி பாட்டுத் தலங்கள் உருவாக்கப்படுகின் றன. பிற மத வழிபாட்டுத் தலங்கள் சூறையாடப்படுகின்றன. மூன்றாவது யுக்தி, சிங்களக் குடியேற்றம், தமிழ் மக் களின் நிலங்களை ராணுவம் கையகப் படுத்தி, குடியிருப்புகளை உருவாக்கி சிங் களர்களை குடியமர்த்துகிறது. விடுதலைப் புலிகளால் துரத்தப்பட்ட மக்களை மீண்டும் கொண்டு வருவதாகச் சொல்லி, ராணுவக்குடும்பங்களை தமிழ் மண் ணுக்கு இடம் மாற்றுகிறார்கள். உறவு களை இழந்து, வாழ்வாதாரத்தை இழந்து, வரலாற்றையும் இழந்து தமிழர்கள் மிகப்பெரிய இக்கட்டில் தவிக்கிறார்கள்.
தமிழ் மக்கள் - குறிப்பாக பெண்கள் - ராணுவத்தால் பெரும் கொடுமைக்கு ஆளாக்கப்படுவதும் தொடர்கிறதே?
உண்மை தான் பெரும்பாலான தமிழர் கிராமங்களில் ஆண்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து விட்டது. பெரும் பாலான பெண்கள் தனித்தே வாழ்கிறார் கள்; ஆண்கள் கொல்லப்பட்டு விட்டார் கள், அல்லது காணாமல் போய்விட்டார் கள். பெண்களே பொருளீட்டி வாழ வேண்டிய நெருக்கடியில், பெண் பிள் ளைகளை தனியாக வீட்டில் விட்டு விட்டுச் செல்ல வேண்டியிருக்கிறது. அவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை. ராணுவத்தினர் மட்டுமின்றி உள்ளூர் அரசியல்வாதிகளும் அவர்கள் மீதான பாலியல் வன்கொடுமையில் ஈடுபடு கிறார்கள். வெளியில் சொன்னாலோ, காவல்நிலையத்திற்குப் போனாலோ உயிரோடு வாழ முடியாது.
இதனால், சீக்கிரமே பெண் பிள்ளை களுக்குத் திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள். இது வேறு விதமான பிரச்சினைகளை உருவாக்குகிறது. பெண் பிள்ளைகள் நிறைய படித்திருக்கிறார்கள். படிக்காத ஆண்களுக்கு அவர்களைத் திருமணம் செய்து வைப்பதால், குடும்ப வன்முறைகள் அதிகரிக்கின்றன. அதிக மான பெண்கள் விவசாயத்தை சார்ந்து வாழ்ந்தவர்கள். நல்ல விளைச்சல் தந்த அவர்களின் நிலங்களைப்பிடுங்கி, ராணுவ முகாம்களாக மாற்றி விட்டார்கள். இத னால் மிகக் குறைந்த அளவே விவசாயம் நடக்கிறது. கடன் வாங்கி வேறு தொழில் செய்வதற்கும் வழியில்லை. சிங்களத் தொழிலதிபர்கள் மொத்தமான பொருட் களை வாரிக்கொட்டி விற்பனை செய் கிறார்கள். அடித்தட்டுக் குடும்பங்கள் வாழ்வாதாரம் இல்லாமல் தவிக்கின்றன.
தமிழர் பகுதிகளில் இதுவரை எந்தப் புள்ளி விவரங்களும் நேர்மையாகப் பதிவு செய்யப்படவில்லை. தற்போது நடைபெற்றுவரும் காணாமல் போனவர் பற்றிய தகவல் சேகரிப்பும் முறையாக நடக்கவில்லை என்று தகவல்கள் வரு கின்றன. எந்த ராணுவத்துக்கு எதிராகப் போராடினார்களோ, அந்த ராணுவத்தின் ஆதிக்கத்திலேயே வாழ நேர்வது மிகப்பெரிய அச்சுறுத்தல்.
போருக்குப் பிறகு இது சிறந்த காலம் என்கிறாரே ராஜபக்சே?
சரியாகத்தான் சொல்கிறார். இது அவருக்கும், அவரது குடும்பத்துக்கும் சிறந்த காலம். ராஜபக்சே, அதிபர் - ராணுவ அமைச்சர் அவரது அண்ணன் ஷமல் ராஜபக்சே இலங்கை சபாநாயகர்; இன் னொரு சகோதரர் கோத்தபய ராணுவச் செயலாளர்; இன்னொரு சகோதரர் பசில் ராஜபக்சே பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்; ராஜபக்சேயின் மகன் நமல், நாடாளுமன்ற உறுப்பினர். கிளிநொச்சி வட்டாரத்தின் வளர்ச்சித் திட்டங்கள் அனைத்துக்கும் அவர்தான் பொறுப்பு; தமிழர்களுடைய நிலங்களை அபகரிப் பதில் நமல்தான் முன் நிற்கிறார். இப்படி ஒட்டு மொத்த இலங்கையையும் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டி ருக்கிற ராஜபக்சேவுக்கு நிச்சயமாக இது சிறந்த காலம்தான்.
தங்களைச் சுற்றி பல வன்முறைக் குழுக்களை ராஜபக்சே குடும்பம் வளர்த்து வருகிறது. குறிப்பாக பொதுபலசேனா என்ற புத்த பேரினவாத அமைப்பு. இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ பண்பாடுகளைக் குலைத்து, வழிபாட்டுச் சுதந்திரத்தை பறிப்பதில் முன்னிலை வகிக்கிறது. பத் திரிகைகள், எதையும் சுதந்திரமாக எழுத முடியவில்லை. எதிர்த்துப் பேசுபவர்கள் குறி வைக்கப்படுகிறார்கள். போர்க்காலத் தில் ராஜபக்சேவுக்கு ஆதரவளித்த சிங்கள மக்கள் இப்போது முழுமையாக வெறுக் கத் தொடங்கி விட்டார்கள்.
சுயமரியாதையோடும், சுதந்திரத் தோடும் தமிழ் மக்கள் இலங்கையில் வாழ்வது சாத்தியமா?
இப்போதுள்ள நிலையில், அது சாத்தி யமில்லை என்பதே என்கருத்து. இலங்கை தேசிய கீதத்தைக்கூட தமிழில் பாட சுதந்திர மில்லாத ஒரு நிலையில் எப்படி இணைந்து வாழ முடியும்? தமிழ் மக்கள் தங்களுக் கென்று தனித்த சுய ஆட்சி, சுய அதிகாரம் கொண்ட ஒரு அரசையே விரும்புகிறார் கள். 75 சதவீத வாக்குகளை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கியிருப்பதன் மூலம், எங்கள் பிரதிநிதிகளே எங்களை ஆளவேண்டும் என்று தமிழ் மக்கள் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள்.
தமிழர் பகுதிகளில் இருந்து முற்றிலு மாக ராணுவம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும். அரசியல் சாசனத்தை முழுவது மாக மாற்றி எழுதவேண்டும். தமிழர் களின் எதிர்ப்பு, கோபம், உணர்வுகள் அனைத்துக்கும் மரியாதை அளிக்க வேண் டும். அவர்களுக்கான திட்டங்களை அவர் களே தீர்மானிக்கும் நிலை வரவேண்டும். இலங்கை என்பது இரண்டு தேசிய இனங்களை உள்ளடக்கிய நாடு. இரண்டு தேசிய மொழிகளைக் கொண்ட நாடு. சிங்களர்களுக்கு உள்ள உரிமைகள், தமிழர்களுக்கும் உண்டு.
அய்.நா.சபையில் மூன்றாவது தீர் மானம் எதையாவது சாதிக்குமா?
சாதிக்கும் என்ற நம்பிக்கையோடுதான் செயல்பாடுகளை முன்னெடுக்கிறோம். உலக நாடுகளிடம் பேசுகிறோம். போர்க் குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத் துவது ஒன்றே இப்போது நம் கோரிக்கை. உள்நாட்டு விசாரணை என்பது பொய், ஏமாற்று வேலை. இதை சமரசமில்லாமல் வலியுறுத்துவோம், உலகநாடுகளும் அழுத்தம் தரும் என்று நம்புகிறோம்.
அரசு, அரசியல்வாதிகள், மதவாதி கள் என எல்லா தரப்பாலும் குறி வைக்கப்படுகிறீர்கள். எதிர்ப்புகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?
என்னை சிங்களப்புலி என்கிறார்கள். அமெரிக்காவிடம் காசு வாங்கிக்கொண்டு வேலை செய்கிறேன் என்றும் சொல்கிறார் கள். தேசப்பற்று இல்லாதவள் என்று தூற்றுகிறார்கள். தேசத்தின் மீது பற்று இருப்பதால்தான் போராடுகிறேன். நான் வெறுப்பது இலங்கையின் ஆட்சியாளர் களைத்தான். இலங்கையை அல்ல. இலங் கையில் எல்லா தரப்பினரும் அமைதியோ டும், உரிமையோடும் வாழ வேண்டும். மனித உரிமையே எனதுகொள்கை. மதம், இனம் கடந்து மனிதர்களுக்காகப் போராடு வது எனது இயல்பு. அதை யாருக்காகவும் மாற்றிக்கொள்ள மாட்டேன்.
- வெ.நீலகண்டன்
நன்றி: குங்குமம் 3.3.2014


Read more: http://www.viduthalai.in/e-paper/76045.html#ixzz2utYiFqus

Geen opmerkingen:

Een reactie posten