இருப்பினும் இலங்கை அரசு எந்தவிதமான முன்னேற்றத்தையும் மேற்கொள்ளவில்லை என்றும், தமிழர்களுக்கு தீர்வு காண்பதனைக் கூட இழுத்தடித்துச் செல்வதாகவும் கூறியுள்ளார். இதேவேளை இலங்கையில் இடம்பெற்ற படுகொலைகளை இலங்கை அரசு இதுவரை சரியாக விசாரிக்கவில்லை என்று காட்டமாகக் கூறிய டேவிட் கமரூன் அவர்கள், சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்று தேவை என்பதனையும் வலியுறுத்தியுள்ளார். தாம் இதனை மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ள கருத்துகள், தமிழர்களை கொஞ்சமாவது ஆறுதலடைய வைத்துள்ளது. அமெரிக்க பிரேரனை மூலம் , தாம் ஏமாற்றப்பட்டு விட்டதாக தமிழர்கள் உணர்கிறார்கள். இதேவேளை பிரித்தானிய அரசாவது ஏதாவதை தமிழர்களுக்கு உருப்படியாகச் செய்யாதா என்று அவர்கள் ஏங்கி நிற்கிறார்கள்.
இன் நிலையில் இன்றைய தினம் பிரதமர் டேவிட் கமரூன் அவர்கள், தெரிவித்துள்ள கருத்துகள் மிகவும் வரவேற்க்கத் தக்க விடையமாக இருக்கிறது. ஆனால் அவற்றை செயல்படுத்த , கான்சர்வேட்டிவ் கட்சிக்கான தமிழர் அமைப்பு, முனைப்புக் காட்டவேண்டும். இதுதொடர்பாக கான்சர்வேட்டிவ் கட்சிக்கான தமிழர் அமைப்பின் முக்கிய உறுப்பினரான டாக்டர் அருச்சுணாவை அதிர்வு இணையம் தொடர்புகொண்டு இதுதொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளது. பிரித்தானிய பிரதமர் கூறியுள்ள கருத்தை தாம் வரவேற்பதாக அவர் தெரிவித்துள்ளதோடு, இதனை நடைமுறைப்படுத்த தாம் நிச்சயம் பாடுபடுவதாகவும் உறுதியளித்துள்ளார், என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6564
Geen opmerkingen:
Een reactie posten