தமிழீழ விடுதலைப்புலிகள் பொதுமக்களை கொலைசெய்த சந்தர்ப்பங்கள் ஒருபோதும் நிகழ்ந்திருக்கவில்லை. ஆகவே முல்லைத்தீவு மூங்கிலாறு பிரதேசத்தில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் யுத்தத்தில் உயிரிழந்த அப்பாவிப் பொதுமக்களுடையதாக இருப்பதற்கான வாய்ப்புக்களே அதிகமுள்ளது.
தருணம் பார்த்து அரசாங்கம் விடுதலைப்புலிகள் மீது பழிசுமத்துகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மூங்கிலாறு பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஒன்பது மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டிருந்தன.
விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட்ட பொதுமக்களின் எலும்புக்கூடுகள் தான் அவையெனவும் அதற்கான சாட்சியாக பொதுமகன் ஒருவரின் வாக்குமூலமொன்று கிடைக்கப் பெற்றிருப்பதாக தகவல் வெளியிடப்பட்டிருக்கின்றமை தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது மக்கள் பாதுகாப்பு வலயங்கள் பல உருவாக்கப்பட்டிருந்தன. இருப்பினும் மக்கள் பாதுகாப்பு வலயங்களில் இடம்பெற்ற ஷெல் தாக்குதல்களினால் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட பொதுமக்களின் உடல்கள் அப் பாதுகாப்பு வலயத்தினுள்ளும் அதனைச்சூழவுள்ள பிரதேசங்களிலும் புதைக்கப்பட்டன என்பதற்காகன சாட்சியங்கள் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டிருந்த கற்றுத்தந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு அளிக்கப்பட்டுள்ளன.
தமிழீழ விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில் பொதுமக்களை மிரட்டிய குற்றச்சாட்டுக்களை நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். அதனை நாம் மறுக்கவுமில்லை. ஆனால் ஒரு போதும் பொதுமக்களை அவர்கள் கொலை செய்தார்கள் என கேள்விப்படவில்லை. அவர்கள் அவ்வாறு செய்ததுமில்லை.
அரசாங்கம் தற்போது ஜெனிவாவில் நெருக்கடிகளைச் சந்திக்கும் நிலையில் நாட்டின் பலபாகங்களிலும் மனித எலும்புக்கூடுகள் தொடர்ச்சியாக மீட்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தருணம் பார்த்து விடுதலைப் புலிகளின் மீது பழியைச் சுமத்தி அழுத்தங்களிலிருந்து தப்பித்துக் கொள்ள முயல்கின்றது.
எவ்வாறாயினும் குறித்த மனித எலும்புக்கூடுகள் தொடர்பில் நியாயமான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதோடு மேலும் அப்பகுதியில் மீட்புப் பணிகளை தொடரும் பட்சத்தில் உண்மை வெளிப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
[ செவ்வாய்க்கிழமை, 04 மார்ச் 2014, 10:21.13 AM GMT ]
பெண்ணிடம் பணத்தை திருடிய இராணுவப் புலனாய்வாளர் மக்கள் துரத்திப் பிடித்தனர்!
[ செவ்வாய்க்கிழமை, 04 மார்ச் 2014, 10:14.12 AM GMT ]
அதன் பின்னர் அப்பகுதியில் நின்ற இளைஞர்களும் பேரூந்து பயணிகளும் அந்நபரை துரத்தி பிடித்த போது அவர் தான் இராணுவப் புலனாய்வாளர் என சிங்களத்தில் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் குறித்த நபரைப் பொலிஸாரிடம் இளைஞர்கள் கையளித்துள்ளனர்.
இதே வேளை குறித்த நபரை பிடித்தபோது பொலிஸாரும் இராணுவத்தினரும் உடனடியாக வந்து சேர்ந்ததால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
ஐ.நா மனித உரிமைப் பேரவையில் உரையாற்றும் அமைச்சர் பீரிஸ் நவிபிள்ளையுடன் முக்கிய சந்திப்பு
[ செவ்வாய்க்கிழமை, 04 மார்ச் 2014, 09:52.50 AM GMT ]
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் பங்கேற்கும் இலங்கை பிரதிநிதிகள் குழுவிற்கு தலைமை தாங்கும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஏனைய நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் ஏனைய நாடுகளின் பிரதிநிதிகள் குழுவின் தலைவர்களை அமைச்சர் பீரிஸ் சந்திக்க உள்ளதுடன்,
அமைச்சர் பீரிஸ் நாளை புதன்கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 25வது கூட்டத் தொடரின் மூன்றாவது நாளில் உரையாற்றவுள்ளதுடன்.
எதிர்வரும் வியாழக்கிழமை நவனீதம்பிள்ளையிடம் முக்கிய பேச்சுவார்த்தையில் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான குழுவினர் ஈடுபட உள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனீவாவிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி அலுவலகம் அறிவித்துள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten