[ வியாழக்கிழமை, 20 மார்ச் 2014, 12:18.47 PM GMT ]
2000 ஆம் ஆண்டு நடந்த இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு அனுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைக்கப்பட்ட பின்னர் காணாமல் போயுள்ள தனது பிள்ளைகள் தொடர்பில் கருணா அம்மான் தான் பொறுப்பு கூற வேண்டும் என ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்த 57 வயதான தந்தையொருவர் தெரிவித்துள்ளார்.
வழக்கில் ஆஜரான அரச சட்டத்தரணி, வழக்கு சம்பந்தப்பட்ட தடயங்களும், ஆவணங்களும் காணாமல் போயுள்ளதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் தனக்கு அறிவித்துள்ளதாக கூறினார்.
வழக்குடன் சம்பந்தப்பட்ட தடயங்கள் மற்றும் ஆவணங்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து நீதிமன்றத்திற்கு அறிய தருமாறு நீதிபதி ரேமா ஸ்வர்ணாதிபதி, அனுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதகருக்கு உத்தரவிட்டார்.
இதனையடுத்து வழக்கு விசாரணைகளை ஜூலை 28 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் சம்பந்தப்பட்ட விடயம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
எனது பிள்ளைகள் காணாமல் போனதற்கு கருணா அம்மானே பொறுப்பு: ஆணைக்குழு முன் கதறிய தந்தை
[ வியாழக்கிழமை, 20 மார்ச் 2014, 12:34.18 PM GMT ] [ பி.பி.சி ]
விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதிகளில் ஒருவராக விளங்கிய கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தற்போது அரசாஙகத்தில் மீள்குடியேற்ற துணை அமைச்சராக பதவி வகித்து வருகின்றார்.
வடக்கு- கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் கிழக்கு மாகாணத்திற்கான முதலாவது அமர்வு இன்று ஆரம்பமானது.
இன்று வியாழக்கிழமை தொடக்கம் நாளை மறுதினம் சனிக்கிழமை வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆணைக்குழுவின் அமர்வுகள் நடைபெறுகின்றன.
இன்று முதலாவது நாள் செங்கலடி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற அமர்வின் போது அந்தப் பிரதேசத்திலுள்ள 54 சாட்சிகள் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார்கள்.
இன்றைய விசாரணையின் போது சாட்சியளித்த களுவன்கேணியைச் சேர்ந்த 7 பிள்ளைகளின் தந்தையான கணபதிப்பிள்ளை தங்கராசா அவர்கள், கருணா அம்மானின் ''வீட்டுக்கு ஒரு பிள்ளை'' என்ற திட்டத்தின் கீழ் அவரது ஆட்களினால் தனது இரு பிள்ளைகளும் பிடித்துச் செல்லப்பட்டதாகக் கூறுகின்றார்.
சிறு வயதிலே பிடித்துச் செல்லப்பட்ட தனது இரு பிள்ளைகள் தொடர்பில் அவர்தான் பதில் தர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்றைய அமர்வின் போது சாட்சியமளிக்க வந்தவர்களில் பலரது சாட்சியங்கள் கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்ட பின்னர் காணாமல் போனவர்கள் தொடர்பாகவே இருந்தது.
பாவற்கொடிச்சேனையை சேர்ந்த 34 வயதான தவராசா உத்தரை அவர்கள்,
2009 மார்ச் மாதம் 3 ஆம் திகதி தனது கணவர் விஷேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டு, காணாமல் போயுள்ளதாக தனது சாட்சியத்தில் கூறினார்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு புலனாய்வு துறையினரால் அழைக்கப்பட்டு வாக்கு மூலமொன்று பெறப்பட்டு மரணச் சான்றிதழ் மற்றும் நஷ்ட ஈடு வழங்குதல் தொடர்பாக கூறப்பட்டாலும் அதனை தான் மறுத்து விட்டதாகவும் தனது சாட்சியத்தில் அவர் குறிப்பிட்டார்.
இரண்டாம் இணைப்பு
காணாமல்போன தமது பிள்ளைகள் தொடர்பில் இதுவரை எதுவித தகவலும் இல்லை. எமது பிள்ளைகளை படையினரே கொண்டு சென்றனர். எமது பிள்ளைகளை மீட்டுத்தர ஆவன செய்ய வேண்டும். எங்களுக்கு இறுதியாக இருக்கும் ஒரேயொரு நம்பிக்கை இந்த ஆணைக்குழுதான் என மட்டக்களப்பில் நடைபெற்றுவரும் காணாமல்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையின்போது கண்ணீர் மல்க உறவினர்கள் தெரிவித்தனர்.
தமது குடும்பத்தின் வறுமை காரணமாக பாடசாலை கல்வியை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்ற தமது பிள்ளைகள் கடத்தப்பட்டுள்ளது தொடர்பிலும் இங்கு கண்ணீர்மல்க சாட்சியமளித்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில், காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் கிழக்கு மாகாணத்துக்கென நடைபெறும் விசாரணைகளின் முதலாவது அமர்வு இன்று வியாழக்கிழமை ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.
ஜனாதிபதி ஆணைக்குழுவில், தலைவர் மெக்ஸ்வல் பராக்கிரம பரணகமகே, செயலாளர் எச்.டபிள்யூ.குணதாச, பிரியந்தி சுரஞ்சனா வித்தியாரத்ன, மனோ ராமநாதன் ஆகியோர் அடங்குகின்றனர்.
மட்டக்களப்பில் ஆணைக்குழுவுக்கான விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளும் வகையில் கடந்த ஓகஸ்ட் மாதம் முதல் செயற்பட்டதன் அடிப்படையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்தன.
இன்று ஏறாவூர் பற்று - செங்கலடி பிரதேச செயலகப்பிரிவுக்கான விசாரணைகள் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த அமர்வில் ஏறாவூர் பற்று - செங்கலடி பிரதேச செயலகப்பிரிவுக்கு உற்பட்ட காணமால் போணவர்கள் தொரடர்பான விசாரனை நடைபெற்றதுடன் ஐனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் காணாமல் போனவர்கள் தொடர்பான சாட்சியங்களை அவர்களது உறவினர்கள் அளித்தனர்.
இதன் போது தவராஜா சந்திராவதி என்பவர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் அளிக்கும் போது தனது மகனை தேடி வந்ததாகவும் காணமால் போகும் போது தனது மகனுக்கு 15 வயது எனவும் தெரிவித்தார்.
பாடசாலை போகாமால் தனது மகன் குடும்ப கஸ்டம் காரணமாக கூலி வேலை பார்த்து வந்ததாகவும் தெரிவித்த குறித்த தாய், தனது மகனை மீட்டு தரும்படி கதறியழுது தனது மகனின் பிரிவை ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் அளித்ததுடன் தனது மகனை இலங்கை இராணுவத்தினர்தான் கடத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
தமது பிள்ளைகள் இருவர் விடுதலைப்புலிகள் இருந்தபோது கருணா அம்மான் தலைமையிலானவர்கள் வந்து வலுக்கட்டாயமாக போராட்டத்துக்கு அழைச்சென்றதாகவும் அவர்கள் இதுவரையில் வீடு திரும்பவில்லையெனவும் களுவன்கேணியை சேர்ந்த கணபதிப்பிள்ளை தங்கராசா என்பவர் தனது சாட்சியத்தில் பதிவு செய்துள்ளார். 12 மற்றும் 17 வயதுகளை உடைய தமது பிள்ளைகளே இவ்வாறு கொண்டு செல்லப்பட்டதாகவும் வீட்டுக்கு ஒரு பிள்ளை தேவையென்று கூறியே கொண்டு சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.
தனது 18 வயது மகன் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளினால் தமது 2007ஆம் ஆண்டு கடத்தப்பட்டு சில தினங்களில் விடுவிக்கப்பட்டார். ஆனால் விடுவிக்கப்பட்டு சில தினங்களில் தனது மகன் மீண்டும் கடத்தப்பட்டதாக செங்கலடியை சேர்ந்த ரவிச்சந்திரன் ஜீவராணி என்ற பெண் தெரிவித்தார்.
இதேவேளை தவராஜா உத்திரை என்ற பெண் தனது கணவர் 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதி காணாமல் போனதாக தெரிவித்தார்.
தனது கணவர் மாடு விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்ததாகவும் மாடு பார்க்க சென்ற போதே விசேட அதிரடிப்படையினரால் பிடிக்கப்பட்டதாகவும் பிடிக்கபட்ட பின்னர் படை முகாமிற்கு சென்று தனது கணவரை விடும் படி கோரியதாகவும் நாளை தன் கணவரை விட்டுவிடுவதாக அந்தபடை முகாமில் இருந்த அதிகாரி தெரிவித்தாகவும் குறிப்பிட்டார். அடுத்த நாள் போய் விசாரித்த போது தன் கணவரை படையினர் பிடிக்கவில்லை என அதே அதிகாரி தெரிவித்தாகவும் அந்த பெண் கதறி அழுது ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் அளித்தார்.
தமது பிள்ளைகள் காணாமல் போனது தொடர்பில் கண்டறிவதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவினை தாங்கள் இறுதியாக மலைபோல் நம்பியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
21ஆம் திகதி கோரளைப்பற்று வடக்கு- வாகரை, கோரளைப்பற்று தெற்கு - கிரான் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கான விசாரணைகள் கிரானிலுள்ள றெஜி கலாச்சார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
அத்துடன், 22ஆம் திகதி மண்முனை வடக்கு - மட்டக்களப்பு பிரதேச செயலகப்பிரிவுக்கான விசாரணைகள் மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 1100 வரையான முறைப்பாடுகளை ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு குறிப்பிட்டளவானவையே விசாரணைகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அதே நேரம், குடும்பத்துடன் படுகொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பில் தகவல் வழங்குவதற்கு யாரும் இல்லை என்ற அடிப்படையில் அவர்களது உறவினர்கள் யாராவது இருந்தால் அவர்கள் கூட ஆணைக்குழுவுக்கு முறையிட முடியும்.
காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை ஜனாதிபதி ஆணைக்குழு 1990 - 2009ஆம் ஆண்டு கால அசாதாரண சூழ்நிலையின் போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முன்னெடுத்து வருகிறது.
இந்த கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளை நேரடியாக விசாரணை செய்யும் நடவடிக்கைகளே தற்போது நடைபெற்று வருகின்றன. இவை தொடர்பான அறிக்கையை இந்த ஆணைக்குழு ஜனாதிபதியிடம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தின் இறுதியில் சமர்ப்பிக்கும்.
Geen opmerkingen:
Een reactie posten