[ வெள்ளிக்கிழமை, 21 மார்ச் 2014, 01:07.52 AM GMT ]
இது தொடர்பில் அமெரிக்க செனட் சபையின் தலைவர் பொப் மெனன்ட்ஸ் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இதில் அமெரிக்க அரசாங்கத்தினால் ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைக்கப்படும் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் இலங்கையில் ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும் நிலைப்படுத்துவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு செயற்பட வேண்டும்.
இலங்கை அரசாங்கம் நேர்மையான வழியில் விசாரணை ஒன்றுக்கு ஒப்புக் கொள்ளும் வரையில், சர்வதேச அழுத்தங்கள் தொடர்ந்து பிரயோகிக்கப்பட வேண்டும் என்று அவர் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
http://news.lankasri.com/show-RUmsyDRVLWmo6.html
இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்திற்கு ஆதரவில்லை: அவுஸ்திரேலியா
[ வெள்ளிக்கிழமை, 21 மார்ச் 2014, 05:10.24 AM GMT ]
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் நிறைவேற்ற உள்ளன.
இந்த தீர்மானத்திற்கு அவுஸ்திரேலியா ஆதரவளிக்காது என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசொப் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அவுஸ்திரேலியாவிற்கு வாக்களிக்கும் உரிமை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், கடந்த காலங்களில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு அவுஸ்திரேலியா அனுசரணை வழங்கியிருந்தது.
சட்டவிரோத அகதிக் கோரிக்கையாளர் விவகாரத்தில் இலங்கை அளித்து வரும் உதவிகளுக்கு பிரதியுபகாரமாக அவுஸ்திரேலியா இம்முறை தீர்மானத்திற்கு ஆதரவளிக்காது என தெரிவிக்கப்படுகிறது.
மறுவாழ்வு மற்றும் புனரமைப்பு பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து உலக சமூகம் கவனம் வெலுத்த வேண்டுமென பிசொப் தெரிவித்துள்ளார்.
போர் நிறைவின் பின்னர் நாட்டில் பாரியளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் நிரந்தரமான நல்லிணக்கத்தை உருவாக்க உலக நாடுகள் ஆக்கபூர்வமான அடிப்படையில் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியமானது என அவுஸ்திரேலிய ஊடகமொன்றுக்கு பிசொப் கருத்து வெளியிட்டுள்ளார்.
தொடர்புபட்ட செய்தி: அவுஸ்திரேலியா தனது நற்பெயரை இழந்து விடக்கூடாது: ஆஸி. வெளிவிவகார அமைச்சருக்கு மின்னஞ்சல்
இலங்கை மீது வரவுள்ள தீர்மானம் வலிமையானது நன்மைகள் நடக்கலாம் அவுஸ்திரேலிய தன்னார்வப் பணியாளர்
இலங்கை மீது வரவுள்ள தீர்மானம் வலிமையானது எதுவும் நடக்கலாம் அதனால் தமிழ் மக்களுக்கு சர்வதேசம் உதவ முற்படலாம் என அவுஸ்திரேலிய தன்னார்வப் பணியாளர் எமிலி தெரிவித்தார்.
ஐக்கிய நாடகள் சபையில் வரவுள்ள தீர்மானம் வலிமையானது எதிர்பாராத எதுவும் நடக்கலாம் என Human Rights Law Center பணிப்பாளர் Emilz Howie இன் அவுஸ்திரேலிய தன்னார்வப் பணியாளர் லங்காசிறி வானொலியின் ஜெனிவாக் கலையகத்தில் தெரிவித்தார்.
http://news.lankasri.com/show-RUmsyDRVLWmp6.html
Geen opmerkingen:
Een reactie posten