தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 21 maart 2014

கணவர் கடத்தப்படும் போது புலிகள் இருந்ததாக தெரியவில்லை: மனைவி

கணவர் கடத்தப்படும் போது விடுதலைப்புலிகள் இருந்ததாக தெரியவில்லை என்று காணாமல் போன செங்கலடியைச் சேர்ந்த சிவராசா மரியதாஸ் என்பவரின் மனைவி கலைச்செல்வி (வயது 33)ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தார்.
அவர் தொடர்ந்து சாட்சியமளிக்கையில்,
‘சம்பவ தினமான 2009.06.18 அன்று செங்கலடியிலுள்ள பாடசாலையில் வைத்து பெரிய புல்லுமலை அகதிகளை மீளக் குடியேற்றும் ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார்கள்.
அதனைப் பார்ப்பதற்காக எனது கணவர் அம்மன் புரம் செங்கலடியிலுள்ள எனது வீட்டிலிருந்து செங்கலடிப் பாடசாலைக்குச் சென்றிருந்தார்.
அங்க வைத்தத்தான் அவர் கடத்தப்பட்டிருந்தார். அவரைக் கடத்திக் கொண்டு போகும் போது அங்கு மீள்குடியேற்றத்துக்காக நின்றவர்கள் கண்டிருக்கின்றார்கள். அம்மாவிடம் சொல்லுங்கள் என்று சொல்லி விட்டே சென்றிருக்கின்றார். கொண்டு போனவர்கள் யாரென்று தெரியாது.
காணாமல் போய் மூன்றாம் நாள்தான் அவர் கடத்தப்பட்டிருக்கிறார் என்று தகவல் அறிந்தேன். அதுவரை அவர் உறவினர்களிடம் சென்றிருப்பார் என்று நினைத்திருந்தேன்.
இரண்டு பேர்தான் கடத்திப் போயிருக்கின்றார்கள். எப்படிப்பட்ட ஆட்கள் என்று தெரியாது. அந்நேரம் அந்தப்பகுதியில் விடுதலைப் புலிகள் யாரும் இருந்ததாகத் தெரியவில்லை.
என் கணவருக்கு எவரும் எதிரிகளும் இல்லை. அவர் ஒரு மீனவர். நான் பொலிஸில் முறைப்பாடு செய்தேன். அதேவேளை மட்டக்களப்பிலுள்ள ஒவ்வொரு இராணுவ முகாமாகச் சென்று எனது கணவரின் படத்தைக் காட்டி அவரைக் கண்டீர்களா என்று படையினரிடம் கேட்டேன்.
அவர்கள் எவரும் என் கணவரைக் காணவில்லை என்றுதான் சொன்னார்கள்.
என் கணவரை யார் கடத்தினார்கள் என்று நீங்கள் தான் கண்டு பிடித்துத் தரவேண்டும். நான் எனது குழந்தைகளை என் தாயின் பராமரிப்பில் விட்டு விட்டு மத்திய கிழக்குக்கு இரண்டு வருடம் வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்று விட்டுத் திரும்பியிருக்கின்றேன்.
ஏனக்கு முறையே யதுஷிகா 14, வினிராஜ் 12, றிங்கேசன் 08. ஆகிய வயதுகளில் மூன்று பிள்ளைகள் இருக்கின்றார்கள். ஓலைக் குடிசையில்தான் வாழ்கின்றேன். இப்பொழுது எனது நாளாந்த ஜீவனோபாயத்திற்கு பெரும்பாடு படுகின்றேன். ஏப்படியாவது எனது கணவரைனக் கண்டு பிடித்துத் தாருங்கள் என்றார்.
k_p_l

http://www.jvpnews.com/srilanka/63028.html

Geen opmerkingen:

Een reactie posten