தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 16 maart 2014

ஜெனிவா பிரேரணையில் திருத்தங்களை செய்யும் ஐரோப்பிய நாடுகள் !

இலங்கை சம்பந்தமாக ஐ.நா மனித உரிமை பேரவையில் சமர்பிக்கப்பட்டுள்ள பிரேரணையில் பல திருத்தங்களை செய்ய ஐரோப்பிய நாடுகள் முன்வந்துள்ளன.
இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தின் ஊடாக விசாரணை செய்ய சந்தர்ப்பம் வழங்கும் திருத்தமும் இதில் அடங்கும்.
அத்துடன் புதிய திருத்தங்களுக்கு அமைய சுயாதீனமான விசாரணை ஒன்றை நடத்த இலங்கைக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 5 வருடங்களில் இலங்கை அரசாங்கம் இவ்வாறான விசாரணைகளை நடத்த நடவடிக்கை எடுக்கவில்லை என அமெரிக்கா தலைமையிலான நாடுகளினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் குறித்த பிரேரணை மற்றும் திருத்தங்கள் ஊடாக இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை நடத்த ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்திற்கு முடியாது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே இலங்கை பிரதிநிதிகள் ஜெனிவா மனித உரிமை பேரவையில் கலந்து கொண்டுள்ள ஏனைய நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்து தெளிவுப்படுத்தி வருவதாக தெரியவருகிறது.
http://news.lankasri.com/show-RUmsyDSaLVfu3.html

Geen opmerkingen:

Een reactie posten